/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலான கனமழை

திருவண்ணாமலை மாவட்டத்தில், பரவலான கனமழை, மாவட்டத்தில் அதிகபட்சமாக கீழ்பென்னாத்தூரில் 53 மிமீ மழை பதிவானது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலான கனமழை
X

திருவண்ணாமலை மாவட்டத்தில், பரவலான கனமழை

திருவண்ணாமலை மாவட்டத்தில், பரவலான கனமழை, மாவட்டத்தில் அதிகபட்சமாக கீழ்பென்னாத்தூரில் 53 மிமீ மழை பதிவானது.

வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வடகிழக்கு பருவமழை தொடர்ந்து நீடிப்பதாலும் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை முதல் மிதமான கனமழை வரை பெய்து வருகிறது.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில், நேற்று முன்தினம் இரவு தொடங்கி, தொடர்ந்து விட்டு விட்டு பரவலான கன மழை பெய்து வருகிறது. நேற்று பகல் முழுவதும் லேசான மழை நீடித்தது. திடீரென நேற்று இரவு 10 மணி முதல் மழை பெய்தது,

திருவண்ணாமலை மாவட்டத்தில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான ஆரணி, செய்யார், பேருந்து நிலையம், வந்தவாசி, செங்கம், கலசபாக்கம், கண்ணமங்கலம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நேற்று பகல் முழுவதும் லேசான மழை நீடித்தது, மழையின் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார். கல்லூரிகள் வழக்கம் போல இயங்கின.

நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது, திருவண்ணாமலை மாவட்டத்தில் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த மழை அதிக அளவாக கீழ்பெண்ணாத்தூர் 53.00, தண்டராம்பட்டு 24.40 மில்லிமீட்டரும், ஆரணியில் 17.00 மில்லிமீட்டரும், வெம்பாக்கம் 15.00 மில்லிமீட்டரும், வந்தவாசி 40.00 மில்லிமீட்டரும், சேத்துப்பட்டு 27.60 மில்லிமீட்டரும், ஜமுனாமரத்தூர் 6.00 மில்லிமீட்டரும், கீழ்பெண்ணாத்தூர் 53.00, மில்லிமீட்டரும், போளூர் 10.20 மில்லிமீட்டரும், திருவண்ணாமலை 11.00 மில்லிமீட்டரும், கலசபாக்கம் 12.00 மில்லிமீட்டரும், செங்கம் 4.80 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களின் விளைநிலங்களில் பயிரிடப்பட்ட நெல் கதிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராகி உள்ளது. திடீரென நேற்று முன்தினம் இரவு முதல் மழை பொழிந்து வருவதால் நெல் மணிகளை அறுவடை செய்யமுடியாமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Updated On: 10 Jan 2024 3:54 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  4. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  5. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  7. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  8. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  9. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  10. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்