செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு

செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
X

செய்யாற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் அமைக்கும் பணியினை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு செய்தார்

செய்யாற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் அமைக்கும் பணியை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் குருவிமலை முதல் காலூர் வரை கிராமங்களை இணைக்கும் வகையில் செய்யாற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் தகவல் தொழில்நுட்பவியல் டிஜிட்டல் சேவைகள் துறை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ் குமார் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதியில் செய்யாற்றின் குறுக்கே பூண்டி முதல் பழங்கோயில் வரை கிராமங்களை இணைக்கும் வகையில் ரூபாய் 19.92. கோடி மதிப்பீட்டில் மேம்பாலமும், தென்மாதிமங்கலம் முதல் கீழ் தாமரைப்பாக்கம் வரை கிராமங்களை இணைக்கும் வகையில் ரூபாய் 16.5 கோடி மதிப்பீட்டில் மேம்பாலமும், கீழ்ப் பெத்தரை முதல் பூவாம் பட்டு வரை கிராமங்கள் இணைக்கும் வகையில் ரூபாய் 20.91 கோடி மதிப்பீட்டில் மேம்பாலமும் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதியில் களம்பூர் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அம்ருத் திட்டத்தின் கீழ் ரூபாய் 84.66 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேல் நிலை நீர் தேக்க தொட்டியினை அரசு கூடுதல் தலைமை செயலாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியம் முள்ளிப்பட்டு ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ. 5.37 இலட்சம் மதிப்பில் குடிநீர் விநியோக பைப்லைன் நீட்டிப்பு செய்யும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் அரசு கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், கூடுதல் ஆட்சியர் ரிஷப், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி ,செய்யாறு சார் ஆட்சியர் பல்லவி வர்மா ,திட்ட இயக்குனர் சரண்யா தேவி ,ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சிவ தாஸ் ,ஆரணி வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் ,பேரூராட்சி செயல் அலுவலர்கள் ,வட்டாட்சியர்கள், மண்டல துணை வட்டாட்சியர்கள் ,வருவாய் ஆய்வாளர்கள் , அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!