/* */

திருப்பதிக்கு இணையாக திருவண்ணாமலையில் மாட வீதிகள்: அமைச்சர் வேலு

ஆன்மிகத்தையும், திராவிட மாடல் ஆட்சியையும் யாராலும் பிரித்து பார்க்க முடியாது என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்

HIGHLIGHTS

திருப்பதிக்கு இணையாக திருவண்ணாமலையில் மாட வீதிகள்: அமைச்சர் வேலு
X

அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் மாடவீதி இணை சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ,சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

திருவண்ணாமலை மாடவீதியில், சர்வதேச தரத்தில் சிமெண்டு சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமை தாங்கினார். தமிழக சட்டமன்ற துணை சபாநாயாகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார்.

நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல் வரவேற்றார். சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், அம்பேத்குமார், திருவண்ணாமலை நகரமன்றத் தலைவர் நிர்மலா வேல்மாறன், ஒன்றியக்குழு தலைவர்கள் கலைவாணி கலைமணி, பரிமளா கலையரசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு காந்தி சிலை அருகில் சிமெண்டு சாலை அமைப்பதற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் 2021-22 நிதியாண்டில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டத்தின் மூலமாக, 257.17 கிலோ மீட்டர் நீளத்தில் ரூ.321 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அகலப்படுத்துவது, உறுதிப்படுத்துப்படுவது, சிறு பாலங்கள் கட்டுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலேயே திருவண்ணாமலை மாவட்டத்தில் தான் அதிகப்படியான பணிகள் நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலையில் இருந்து அரூர் வழியாக தருமபுரியை இணைக்கும் சாலை ரூ.120 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட உள்ளது. ரூ.140 கோடியில் 19.50 கிலோ மீட்டர் தொலைவிற்கு திருவண்ணாமலை- திருக்கோவிலூர் சாலை 4 வழி சாலையாக அமைக்கப்பட உள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கார்த்திகை தீபத் திருவிழாவிற்கும், மாதத்தில் 2 நாட்கள் பவுர்ணமி கிரிவலத்திற்கும் ஏராளமான ஆன்மிக பெருமக்கள் வருகை தருகின்றனர். எனவே, மாடவீதியில் தரமான சிமெண்டு சாலை அமைக்க, ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்த பாதையில் இருபுறமும் நடைபாதையும், மத்தியில் கான்கிரீட் சாலையும் அமைய உள்ளது. நடைபாதைக்கு கீழ் தான் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட உள்ளது. பூமிக்கு அடியில்தான் மின் கம்பிகள் அமைக்கப்பட உள்ளது. ரூ.15 கோடியில் தொடங்கியுள்ள இந்த பணிகள் நிறைவு பெறும் போது ரூ.25 கோடியை தாண்டும்.

திராவிட மாடல் ஆட்சி என்றால் சிலருக்கு கசக்கிறது. திராவிடம் என்பது நமது மண்ணுக்கு சொந்தம். இந்த திராவிட மாடல் ஆட்சியில் தான் ஆன்மிகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் பிரதாப், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்பவன்குமார்ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி, தி.மு.க. மருத்துவ அணி மாநில துணை தலைவர் எ.வ.வே.கம்பன், முன்னாள் எம்.பி. வேணுகோபால், தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், பொதுக்குழு உறுப்பினர் பிரியா விஜயரங்கன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் இரா.ஜீவானந்தம், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், நகர மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 9 May 2022 12:09 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...