/* */

திருவண்ணாமலை கார்த்திகைத் தீபத் திருவிழா: துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடக்கம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகைத் தீபத் திருவிழா, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கியது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை கார்த்திகைத் தீபத் திருவிழா: துர்க்கை அம்மன் உற்சவத்துடன்  தொடக்கம்
X

காமதேனு வாகனத்தில் துர்க்கை அம்மன்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகைத் தீபத் திருவிழா, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் நேற்று (24-ம் தேதி) இரவு தொடங்கியது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 17 நாட்கள் நடைபெறும் கார்த்திகைத் தீபத் திருவிழா, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் நேற்று இரவு தொடங்கியது. இதையொட்டி, சின்ன கடை வீதியில் உள்ள துர்க்கை அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டன. பின்னர், சந்தன காப்பு அலங்காரம் மாலையில் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து இரவு 8 மணிக்கு மேல் வாணவேடிக்கைகளுடன், மங்கள வாத்தியங்கள் முழங்க காமதேனு வாகனத்தில் துர்க்கை அம்மன் எழுந்தருளி அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாட வீதியில் வலம் வந்தார். அப்போது அம்மனை திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

பிடாரி அம்மன் உற்சவம் இன்று (25-ம் தேதி) இரவு நடைபெற உள்ளது. அண்ணாமலையார் கோயிலில் தங்க கொடி மரம் அருகே உள்ள பிடாரி அம்மன் சன்னதியில் சிறப்பு பூஜை நடைபெற்றதும், பிடாரி அம்மனின் உற்சவம், மாட வீதியில் நடைபெற உள்ளன.

சிறப்பு பேருந்துகள்:

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது.

கார்த்திகை தீப பெருவிழாவை காண தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் தரிசனத்திற்கு வருவது வழக்கம்.

அப்படி திருவண்ணாமலை வரும் பக்தர்களின் வசதிக்காக, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2700 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது. டிசம்பர் 6-ம் தேதி மட்டும் 25 லட்சம் பக்தர்களும், மகா தேரோட்டத்தின் போது 5 லட்சம் பக்தர்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிசம்பர் 7ம் தேதி பொளர்ணமியும் உள்ளதால் சிறப்பு பேருந்துகளை டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் இயக்க திட்டமிடப்படுள்ளது. பொதுமக்களின் வருகையை பொருத்து பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 25 Nov 2022 12:48 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  2. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  3. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  4. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  5. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  10. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது