/* */

Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்

அனைத்து ராசியினருக்கான இன்றைய மே 3 வெள்ளிக்கிழமை ராசிபலன்கள்

HIGHLIGHTS

Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
X

ராசிபலன் (கோப்பு படம்)

குரோதி வருடம் - சித்திரை- 20

03/05/2024 வெள்ளிக்கிழமை

வருடம் - க்ரோதி வருடம்

அயனம் - உத்தராயணம் .

ருது - வஸந்தருதௌ.

மாதம் - சித்திரை

பக்ஷம் கிருஷ்ண பக்ஷம்.

திதி - இரவு 08.36 PM வரை தசமி பிறகு ஏகாதசி

நக்ஷத்திரம்- இரவு 09.26.PM வரை சதயம் பிறகு பூரட்டாதி

யோகம் - அதிகாலை 05.55 am வரை மரண யோகம் பிறகு நாள் முழுவதும் சித்த யோகம்

நல்ல நேரம் - 09.30 AM-10.30 AM, 04.30 PM-05.30 PM

கௌரி நல்ல நேரம் 12.30 AM-01.30 AM, 06.30 PM -07.30 PM

ராகு காலம் - 10.30 AM- 12.00 PM.

எமகண்டம் - 03.00 PM -04.30 PM.

குளிகை - 07.30 AM - 09.00 PM.

சூரிய உதயம்- காலை 05.47 AM.

சூரிய அஸ்தமனம்- மாலை 06.25 PM.

சந்திராஷ்டமம் – திருவாதிரை & புனர்பூசம்

இன்றைய (03-05-2024) ராசி பலன்கள்

மேஷ ராசிக்கான பலன்கள் மே 3, 2024

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஆதரவு மேம்படும். உத்தியோகத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்

அஸ்வினி : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

பரணி : அறிமுகம் ஏற்படும்.

கிருத்திகை : பாராட்டுக்கள் கிடைக்கும்.

ரிஷப ராசிக்கான பலன்கள் மே 3, 2024

சில அனுபவங்களின் மூலம் புதிய கண்ணோட்டம் பிறக்கும். புதிய முயற்சிகள் சாதகமாகும். சேமிப்பு தொடர்பான ஆலோசனை கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கிடைக்கும். ஆசைகள் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு நிறம்

கிருத்திகை : புதுமையான நாள்.

ரோகிணி : நெருக்கம் அதிகரிக்கும்.

மிருகசீரிஷம் : ஆலோசனை கிடைக்கும்.

மிதுன ராசிக்கான பலன்கள் மே 3, 2024

புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். இறை சார்ந்த பிரார்த்தனைகள் கைகூடும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். உணவு சார்ந்த விஷயங்களில் சற்று கவனம் வேண்டும். வெளியூர் பயணங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். எழுத்து துறைகளில் திருப்பங்கள் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் விவேகத்துடன் செயல்படவும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வட கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : கருநீல நிறம்

மிருகசீரிஷம் : சிந்தித்துச் செயல்படவும்.

திருவாதிரை : மகிழ்ச்சியான நாள்.

புனர்பூசம் : விவேகத்துடன் செயல்படவும்.

கடக ராசிக்கான பலன்கள் மே 3, 2024

ஆரோக்கியம் தொடர்பான விஷயத்தில் கவனம் வேண்டும். வெளி வட்டாரங்களில் பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் அலைச்சல் உண்டாகும். வழக்குகளில் சில திருப்பங்கள் ஏற்படும். சக ஊழியர்களிடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். நிதானம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

புனர்பூசம் : கவனம் வேண்டும்.

பூசம் : உதவிகள் கிடைக்கும்.

ஆயில்யம் : திருப்பங்கள் ஏற்படும்.

சிம்ம ராசிக்கான பலன்கள் மே 3, 2024

செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு விலகும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். எதிர்பார்த்த சில மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த மந்த நிலை விலகும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். நண்பர்களின் வட்டம் விரிவடையும். மனதளவில் புதிய நம்பிக்கை உண்டாகும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

மகம் : சோர்வான நாள்.

பூரம் : மந்த நிலை விலகும்.

உத்திரம் : நம்பிக்கை உண்டாகும்.

கன்னி ராசிக்கான பலன்கள் மே 3, 2024

குடும்பத்தாரின் ஒத்துழைப்பு மேம்படும். இழுபறியான சில தனவரவுகள் கிடைக்கும். உடல் தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். புதிய நபர்களிடத்தில் கவனத்துடன் செயல்படவும். பழைய சிக்கல்கள் படிப்படியாக குறையும். தடைகளை வெற்றி கொள்வீர்கள். அலுவலகத்தில் மதிப்பு உயரும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்

உத்திரம் : ஒத்துழைப்பு மேம்படும்.

அஸ்தம் : ஆர்வம் அதிகரிக்கும்.

சித்திரை : மதிப்பு உயரும்.

துலாம் ராசிக்கான பலன்கள் மே 3, 2024

தனம் சார்ந்த சில உதவிகள் கிடைக்கும். உறவினர்களின் வழியில் சிறு சிறு சங்கடங்கள் தோன்றி மறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கற்பனை சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். குழந்தைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். பேச்சுக்களில் பொறுமையை கையாளவும். சக ஊழியர்களால் ஏற்பட்ட இன்னல்கள் விலகும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

சித்திரை : உதவிகள் கிடைக்கும்.

சுவாதி : நெருக்கம் அதிகரிக்கும்.

விசாகம் : இன்னல்கள் விலகும்.

விருச்சிக ராசிக்கான பலன்கள் மே 3, 2024

நினைத்த சில காரியங்களில் எதிர்பார்ப்பு நிறைவேறும். திடீர் செலவுகளால் சேமிப்பு குறையும். உறவினர்களுடன் இணக்கமாக நடந்து கொள்ளவும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் மகிழ்ச்சியான தருணம் ஏற்படும். கருத்துகளுக்கு உண்டான மதிப்பு தாமதமாக கிடைக்கும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். தடங்கல் விலகும் நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

விசாகம் : எதிர்பார்ப்பு நிறைவேறும்.

அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.

கேட்டை : லாபம் கிடைக்கும்.

தனுசு ராசிக்கான பலன்கள் மே 3, 2024

தந்தை வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். சில பிரச்சனைகளுக்கு முடிவு எடுப்பதில் விவேகம் வேண்டும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தகவல் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். மறைமுகமான தடைகளை புரிந்து கொள்வீர்கள். வேலையாட்கள் இடத்தில் பொறுமையை கடைபிடிக்கவும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மூலம் : உதவிகள் கிடைக்கும்.

பூராடம் : ஆதரவான நாள்.

உத்திராடம் : பொறுமையை கடைபிடிக்கவும்.

மகர ராசிக்கான பலன்கள் மே 3, 2024

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். எதிர்பாராத சில செய்திகளால் மாற்றம் உண்டாகும். புதிய நட்புகளால் உற்சாகம் ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் குறித்த எண்ணம் மேம்படும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பணிகளில் துரிதம் உண்டாகும். போட்டிகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : நெருக்கம் ஏற்படும்.

திருவோணம் : மதிப்பு மேம்படும்.

அவிட்டம் : துரிதம் உண்டாகும்.

கும்ப ராசிக்கான பலன்கள் மே 3, 2024

எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். சந்தேக உணர்வுகளினால் குழப்பம் ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். அதிகாரிகளிடத்தில் அதிக உரிமைகளை தவிர்க்கவும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் மௌனம் காக்கவும். முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம்

அவிட்டம் : நெருக்கடியான நாள்.

சதயம் : குழப்பம் ஏற்படும்.

பூரட்டாதி : மௌனம் காக்கவும்.

மீன ராசிக்கான பலன்கள் மே 3, 2024

விடாப்படியாக செயல்பட்டு நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நண்பர்களிடத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். திட்டமிடாத சில செலவுகளால் நெருக்கடி ஏற்படும். வியாபாரப் போட்டிகளால் புதிய அனுபவம் கிடைக்கும். சக ஊழியர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். எதிர்பாராத சில அலைச்சல்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

பூரட்டாதி : விவாதங்கள் மறையும்.

உத்திரட்டாதி : அனுபவம் கிடைக்கும்.

ரேவதி : ஆதாயம் உண்டாகும்.

Updated On: 3 May 2024 3:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!