/* */

ஆன்மீக நகரத்திலிருந்து தமிழகத்தின் தலைநகருக்கு ரயில் சேவை தொடங்கப்படுமா !

சென்னை - திருவண்ணாமலை மெமு ரயில் எப்போது வரும் பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.

HIGHLIGHTS

ஆன்மீக நகரத்திலிருந்து தமிழகத்தின் தலைநகருக்கு ரயில் சேவை தொடங்கப்படுமா !
X

சென்னை - திருவண்ணாமலை மெமு ரயில் எப்போது வரும்? (கோப்பு படம்) 

கிரிவலம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது திருவண்ணாமலை தான். திருவண்ணாமலை கிரிவலம் தான் ஏராளமானோர் மேற்கொள்வது. இதனை திருவண்ணாமலை கிரிவலம் என்றும், அருணாச்சல கிரிவலம் என்றும் சொல்வார்கள்.

அக்னித் தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். திருவண்ணாமலை, சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாக காட்சித்தரும் தலமாகவும் திகழ்கிறது.

தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் திருவண்ணாமலைக்கு வருகை தருகின்றனர்.

அவ்வாறு வரும் பக்தர்களுக்கு போக்குவரத்து சேவை அதாவது பேருந்து சேவைகள் இருந்தாலும் குறிப்பிட்ட அளவு ரயில் சேவை இல்லாதது பெரிய குறையாகவே உள்ளது.

தமிழ்நாட்டின் தலைநகரத்திலிருந்து ஆன்மீக நகரத்திற்கு ரயில் சேவை இல்லை என்பது ஒரு பெரிய குறையாகவே உள்ளது .

சமீபத்தில் தெற்கு ரயில்வே தாம்பரம்- ராமேஸ்வரம் மற்றும் தாம்பரம் -தனபூர் பகுதிகளுக்கு இடையே நாள்தோறும் ரயில் சேவை தொடங்க பரிந்துரையை முன் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் திருநெல்வேலி - நாகை மற்றும் இதர பகுதிகளுக்கும் வாராந்திர ரயில்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை திருவண்ணாமலை ரயில் வருமா

இந்நிலையில் சென்னை கடற்கரை வேலூர் பயணிகள் ரயிலை, சென்னை கடற்கரை விழுப்புரம் பயணிகள் ரயிலையும் திருவண்ணாமலை வரை விரிவாக்கம் செய்யும் திட்டம் உள்ளதாகவும் ,

கால அட்டவணைக் குழுக் கூட்டத்தின் கோரிக்கைகளைத் தொடர்ந்து இந்த புதிய ரயில்களை அறிமுகப்படுத்துதல், தற்போதுள்ள சேவைகளை நீட்டித்தல் மற்றும் ரயில்களின் அதிர்வெண்களை அதிகரிப்பது தொடர்பான திட்டங்கள் என பல்வேறு திட்டங்கள் சில மாதங்களுக்கு முன்பு ரயில்வே வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டன. ஏப்ரல் 2-ந் தேதி தெற்கு ரயில்வேயின் பயிற்சிப் பிரிவின் உத்தரவு, இந்த திட்டங்களை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை மதிப்பிடுமாறு கோட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றும் ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

புதிய மெமு ரயில்

திருச்சி கோட்டம் சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை கடற்கரை - வேலூர் மெமு ரயிலை திருவண்ணாமலை வரை நீட்டிக்க முன்மொழிந்தது. ஆனால் ரேக் பராமரிப்பில் உள்ள சிக்கல்கள் காரணமாக அது நிறைவேறாமல் போனது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ரயில்வே திருச்சி கோட்ட அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முறை, வேலூர் அல்லது விழுப்புரத்தில் இருந்து வரும் மெமு, அல்லது இரண்டிலும், செயல்பாட்டு சாத்தியக்கூறுகளைப் பொறுத்து திருவண்ணாமலை வரை நீட்டிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரயில்வே வாரியத்திடம் தற்போது அனுமதி கிடைத்ததும், புதிய ரயில் சேவைகள் தொடங்கப்படும் என்றும் ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

ஆனால் இது நாள் வரை சரியான அறிவிப்புகள் எதுவும் ரயில்வே துறையிலிடமிருந்து வராததால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

தற்போது வாரத்திற்கு மூன்றும் நாள் மட்டும் திருநெல்வேலியில் இருந்து புருளியா செல்லும் ரயில் திருவண்ணாமலை வேலூர் வழியாக பெரம்பூர் வரை செல்லும் என்று அறிவிப்பு மட்டும் வந்துள்ளது.

திருவண்ணாமலை திண்டிவனம் ரயில்வே பாதை என்ன ஆனது என்றே தெரியாத நிலையில் பணிகள் நடக்குமா என விடை தெரியாத போது ஏதோ வேலூர் மற்றும் விழுப்புரம் வழியாக சென்னைக்கு ரயில்கள் விடப்படும் என்ற அறிவிப்பு வரப்போகிறது, என ரயில்வே துறை அதிகாரிகள் கூறிய போது மகிழ்ச்சி அடைந்த பொதுமக்கள் இதுவரை எந்த விதமான அறிவிப்பும் வராததால் வருமா வராதா என எப்போது வரும் என்று தெரியாத நிலையில் பக்தர்கள் , பொதுமக்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர்.

இந்த மெமு ரயில் சேவை இயக்கப்பட்டால் ஏராளமான பக்தர்களுக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Updated On: 21 April 2024 2:17 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மன் கோயில் தேர்த்திருவிழா: திரளான பக்தர்கள்...
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. தேனி
    அரசு மருத்துவமனையின் அவலம்! இங்கில்ல… மத்திய பிரதேசத்தில்…!
  5. தேனி
    அம்பானி, அதானியிடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? பிரதமர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. திருவண்ணாமலை
    இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான கோவில் நிலம் மீட்பு!
  8. இந்தியா
    சபரிமலையில் 'ஸ்பாட் புக்கிங்' வசதி ரத்து!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு