/* */

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ஆந்திர மாநில பெண்ணிடம் கொள்ளை முயற்சி

Robbery News -திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஆந்திர மாநில பெண் பக்தரிடம் நடந்த கொள்ளை முயற்சி பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

HIGHLIGHTS

Robbery News | Girivalam Route
X

Robbery News -ஆந்திரா மாநிலம் ஓங்கோல் மாவட்டம் வெங்கட் ராமபாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயசந்திரன் . இவர் தன் மனைவி சுதாராணி மற்றும் குடும்பத்துடன் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் வந்துள்ளார்.

பின்னர் கோவில் அருகே உள்ள தங்கும் விடுதியில் ஓய்வெடுத்து விட்டு இரவில் கிரிவலம் சென்றுள்ளார். நள்ளிரவு சுமார் 11 மணி அளவில் ஈசானிய லிங்கம் அருகே வந்தபோது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தலையில் ஹெல்மெட் மாட்டிக் கொண்டு பைக்கில் வந்து கிரிவலம் சென்ற சுதா ராணி வைத்திருந்த பேக்கை பறிக்க முயன்றனர்.

சுதாரித்துக் கொண்ட அவர் பையை இறுக்குமாக பிடித்துக் கொண்டார் கொள்ளையர்கள் அந்த பையை விடாமல் இழுத்தனர். இதனால் சுதாராணி கீழேவிழுந்து படுகாயம் அடைந்தார். அவர் கத்தி கூச்சலிட்டார். இந்த சத்தத்தை கேட்டு பின்னால் வந்த கணவர் அங்கு ஓடிவந்தார்.

அதற்குள் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த சுதா ராணியை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 29 Sep 2022 4:35 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  3. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  4. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  5. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  6. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  7. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  8. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  9. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு