/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் போலீசார் சாராய ஊறல் கொட்டி அழிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் நடைபெற்ற சோதனையில் 11 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் கொட்டி அழிக்கப்பட்டது

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் போலீசார் சாராய ஊறல் கொட்டி அழிப்பு
X

திருவண்ணாமலை மாவட்டத்தில் சோதனையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் இன்று ஒரே நாளில் 11000 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் கண்டுபிடிக்ப்பட்டு கிழே கொட்டி அழிப்பு. 55 லிட்டர் எரி சாராயம் மற்றும் 70 நாட்டுச் சாராயம் பறிமுதல்.

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் உத்தரவுப்படி, திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் மற்றும் மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் துறையினர் இணைந்து மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் இளங்கோ, செங்கம் மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் மலர், போளூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் புனிதா, செய்யாறு மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் கலையரசி ஆகியோர் தலைமையில் தானிப்பாடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தட்டரணை வனப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்

அதில் 3000 லிட்டர் கள்ளச்சாராய ஊரலும், கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லைப்பகுதியான கல்வராயன் மலைப்பகுதி ஆத்திப்பாடி வனப்பகுதியில் நடத்திய சோதனையில் தலா 250 லிட்டர் கொள்ளளவு கொண்ட 12 பிளாஸ்டிக் பேரல்களில் 3000 லிட்டர் கள்ளச்சாராய ஊரலும், கல்வராயன் மலைப்பகுதி கல்நாட்டுர் புதூர் வனப்பகுதியில் நடத்திய சோதனையில் 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட 04 சின்டெக்ஸ் டேங்கில் 2000 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் மற்றும் 20 லிட்டர் நட்டுச்சாரயமும், கீழ் வலசை மேல் வலசை மலைப்பகுதியில் தலா 250 லிட்டர் கொள்ளளவு கொண்ட 4 பேரல்களில் 1000 லிட்டர் கள்ளச்சாராய ஊரலும் என மொத்தமாக 9000 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் மற்றும் 20 லிட்டர் நாட்டுச் சாராயம் கண்டுபிடிக்கப்பட்டு கிழே கொட்டி அழிக்கப்பட்டது.

மேலும் வேட்டவலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பன்னியூர் எடல் ஏரியின் மேற்கில் உள்ள ஓடையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி, மாவட்ட தனிப்படையினர் நடத்திய சோதனையில் 250 லிட்டர் கொள்ளளவு கொண்ட 08 பிளாஸ்டிக் பேரல்களில் மொத்தம் 2000 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் கண்டுபிடிக்கப்பட்டு கிழே கொட்டி அழிக்கப்பட்டது.

மேலும் வள்ளிவாகை கிராமத்தில் நடத்திய தேடுதல் வேட்டையில் 35 லிட்டர் எரி சாராயமும், மலப்பாம்பாடி கிராமத்தில் நடத்திய சோதனையில் 20 லிட்டர் எரி சாராயமும், நல்லவன் பாளையம் கிராமத்தில் நடத்திய சோதனையில் 50 நாட்டுச் சாராயமும் பறிமுதல் செய்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை திவிரமாக தேடி வருகின்றனர்.

Updated On: 17 July 2022 2:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...