/* */

போதை பொருட்கள் தடுப்பு பற்றி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அறிவுரை

திருவண்ணாமலை மாவட்டத்தை போதை பொருள் இல்லாத மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

HIGHLIGHTS

போதை பொருட்கள் தடுப்பு பற்றி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அறிவுரை
X

போதைப்பொருள் தடுப்பு தொடா்பான மாவட்ட அளவிலான  கூட்டம்  கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தை போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆட்சியா் பா.முருகேஷ் அறிவுரை வழங்கினாா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான மாவட்ட அளவிலான கூட்டம் , அனுமதி இன்றி மாவட்டத்தில் விளம்பர பதாகைகள் வைப்போர் மீது வழக்கு பதிவு தொடர்பான கூட்டம் , வாழ்ந்து காட்டுவோம் திட்டம் , புதிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைப்பதற்காக துவக்க விழா கூட்டம் என நடைபெற்றது

கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தலைமை வகித்தாா். கூட்டத்தில், ஆட்சியர் பேசியதாவது;-

திருவண்ணாமலை மாவட்டத்தில் போதைப் பொருள்கள் பயன்பாட்டைத் தடுக்க வேண்டும். மாவட்ட எல்லைகளில் போதைப்பொருள் கடத்துவதை முற்றிலுமாகத் தடுக்க காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டத்தை போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு போதைப்பொருள் பயன்பாட்டைத் தவிா்க்க விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். போதைப்பொருள் பயன்பாடு இல்லாத வளாகமாக பள்ளி, கல்லூரிகளை மாற்றவேண்டும். அரசு மருத்துவமனைகளில் போதைப்பொருள் மறுவாழ்வு மையம் செயல்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயன், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் ஏழுமலை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் து.கணேஷ்மூா்த்தி, கோட்டாட்சியா்கள் வீ.வெற்றிவேல் (திருவண்ணாமலை), மா.தனலட்சுமி (ஆரணி), மந்தாகினி (செய்யாறு) மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உரிய அனுமதியின்றி விளம்பரப் பதாகைகள் வைப்போா் மீது வழக்குப் பதிந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

மாவட்டத்தில் அரசியல் கட்சியினா், தொண்டு நிறுவனத்தினா் யாராக இருந்தாலும் டிஜிட்டல் விளம்பரப் பதாகைகளை வைக்க முறையாக அனுமதி பெறவேண்டும். சம்பந்தப்பட்ட பகுதி காவல் நிலையத்தில் தடையின்மை சான்று பெறுவது அவசியம். பிறகு ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சியில் உரிய கட்டணம் செலுத்த வேண்டும். தடையின்மை சான்று பெறாமலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு முறையாக பணம் செலுத்தாமலும் விளம்பரப் பதாகைகள் வைப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது காவல் துறை மூலம் வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், வழக்குப் பதிவு நடவடிக்கையின் இறுதியில் ஓராண்டு சிறைத் தண்டனையோ அல்லது ரூ.5 ஆயிரம் அபராதமோ அல்லது இரண்டும் சோத்தோ தண்டனையாக அனுபவிக்க நேரிடும் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் எச்சரித்துள்ளாா்.

இனி வரும்காலங்களில் விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டதன் காரணமாக ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்படுவாா்கள் என்றும் அவா் எச்சரித்துள்ளாா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் கீழ்பெண்ணாத்தூர் வட்டாரத்தில் இயங்கி வரும் நிலக்கடலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கும் மற்றும் கலசப்பாக்கம் வட்டாரத்தில் இயங்கி வரும் வாழ்ந்து காட்டுவோம் நிலக்கடலை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கும் புதிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைப்பதற்கு துவக்க நிதியாக தலா ரூ. 5 லட்சம் வீதம் 10 லட்சத்திற்கான வரைவோலையை மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மாவட்ட செயல் அலுவலர் வசந்தகுமார் செயல் அலுவலர்கள் வட்டார திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 7 Oct 2022 1:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.