/* */

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை அமைக்க ஐகோர்ட் தற்காலிக தடை

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலையை அமைக்க ஐகோர்ட் தற்காலிக தடை

HIGHLIGHTS

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை அமைக்க ஐகோர்ட் தற்காலிக தடை
X

திருவண்ணாமலையை சேர்ந்த ஜி. கார்த்திக் என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில், வேங்கைக்கால் பகுதியில் சிலை அமைப்பதற்காக ராஜேந்திரன் என்பவரால் 92.5 அடி நிலம் விற்கப்பட்ட இடத்தின், அருகில் உள்ள 215 சதுர அடி பொது இடத்தை ஆக்கிரமித்து, அங்கு திமுகவின் மறைந்த தலைவர் கருணாநிதி சிலை வைக்க மாவட்ட திமுகவினர் நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

திருவண்ணாமலைக்கு பல்வேறு மாநிலங்கள் நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வந்துபோகும் இடத்தில், கிரிவல பாதையையும், மாநில நெடுஞ்சாலையையும் இணைக்கும் இடத்தில் சிலையை நிறுவுவதற்காக பில்லர்கள அமைக்கப்பட்டு, அவசர அவசரமாக பணிகள் நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அரசு தரப்பில், இது தனியார் சொத்து என்றும், அதில் சிலை நிறுவப்படுவதை எதிர்த்து வழக்கு தொடர மனுதாரருக்கு எந்த முகாந்திரமும் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்தும், வருவாய் துறை ஆவணங்களை ஆய்வு செய்தும் அறிக்கை தாக்கல் செய்ய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர். அதுவரை சிலை அமைக்கும் விவகாரத்தில் தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது.

Updated On: 19 May 2022 7:41 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  2. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  3. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  4. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  8. பொன்னேரி
    சோழவரம் அருகே லாரி மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்