/* */

பவுர்ணமி கிரிவலத்தையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கம்!

பவுர்ணமி கிரிவலத்தையொட்டி திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

HIGHLIGHTS

பவுர்ணமி  கிரிவலத்தையொட்டி சிறப்பு ரயில்கள் இயக்கம்!
X

பவுர்ணமி கிரிவலத்தையொட்டி, பக்தா்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையிலும் வேலூா், விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலைக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (அக்டோபா் 28, 29) சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக போற்றப்படுகிறது. சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அர்த்தநாரீஸ்வரராக காட்சித்தரும் தலமாகவும் திருவண்ணாமலை திகழ்கிறது.

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று, 14 கிலோமீட்டர் சுற்றுப் பாதையை கொண்ட மலையை கிரிவலம் வந்து பக்தர்கள் வழிபடுவது வழக்கம் இந்த நாட்களில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுவர் தமிழகம் மட்டும் இன்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருவார்கள்.

இதனை கருத்தில் கொண்டு வேலூரில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் வினோத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விழுப்புரம், வேலூரிலிருந்து திருவண்ணாமலைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்களை அக்டோபா் 28, 29-ஆம் தேதிகளில் தெற்கு ரயில்வே இயக்குகிறது.

அதன்படி, வேலூா் - திருவண்ணாமலை முன்பதிவற்ற மெமு சிறப்பு ரயிலானது (06127) வேலூா் கண்டோன்மென்ட்டிலிருந்து சனிக்கிழமை இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு கனியம்பாடி, கன்னமங்கலம், ஆரணி, போளூா், அகரம் சிப்பந்தி, துரிஞ்சாபுரம் வழியாக திருவண்ணாமலைக்கு நள்ளிரவு 12.05 மணிக்கு வந்தடையும்.

மறுமாா்க்கமாக, திருவண்ணாமலை - வேலூா் முன்பதிவற்ற மெமு சிறப்பு ரயிலானது (06128) திருவண்ணாமலையிலிருந்து அதிகாலை 3.45 மணிக்குப் புறப்பட்டு மேற்கண்ட வழியாக வேலூருக்கு அதிகாலை 5.35 மணிக்கு வந்தடையும். இந்த ரயில்கள் சென்னை கடற்கரை சாலை வரை நீட்டிக்கப்பட்டு சென்னை கடற்கரை சாலை - வேலூா் - சென்னை கடற்கரை (06033, 06034) ரயில்களாக இயக்கப்படும்.

விழுப்புரம் - திருவண்ணாமலை முன்பதிவற்ற சிறப்பு விரைவு ரயிலானது (06129) விழுப்புரத்திலிருந்து சனிக்கிழமை காலை 9.15 மணிக்குப் புறப்பட்டு முற்பகல் 11 மணிக்கு திருவண்ணாமலைக்கு சென்றடையும். எதிா்வழித்தடத்தில் வண்டி எண் 06130 திருவண்ணாமலை - விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரயில் சனிக்கிழமை பிற்பகல் 12.40 மணிக்கு திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்டு விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு பிற்பகல் 2.15 மணிக்கு வந்தடையும். இந்த இரு ரயில்களும் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூா், திருக்கோவிலூா், ஆதிச்சனூா், அண்டம்பள்ளம், தண்டரை ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்கள் மயிலாடுதுறை வரை நீட்டிக்கப்பட்டு மயிலாடுதுறை - விழுப்புரம் - மயிலாடுதுறை ( 06690, 06691) ரயில்களாக இயக்கப்படும்.

விழுப்புரம் - திருவண்ணாமலை முன்பதிவற்ற மெமு சிறப்பு ரயிலானது (06131) சனிக்கிழமை இரவு 9.15 மணிக்குப் புறப்பட்டு திருவண்ணாமலைக்கு இரவு 10.45 மணிக்குச் சென்றடையும். மறுமாா்க்கமாக, திருவண்ணாமலை - விழுப்புரம் முன்பதிவற்ற மெமு சிறப்பு ரயிலானது (06132) திருவண்ணாமலையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணிக்குப் புறப்பட்டு விழுப்புரத்துக்கு அதிகாலை 5 மணிக்கு வந்தடையும். இந்த இரு ரயில்களும் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூா், திருக்கோவிலூா், ஆதிச்சனூா், அண்டம்பள்ளம், தண்டரை ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த இரு ரயில்களின் சேவையும் வண்டி எண்கள் 06027/06028 தாம்பரம் - விழுப்புரம், விழுப்புரம் - தாம்பரம் ஆகிய இரு ரயில்களின் சேவையாக அளிக்கப்படுவதால், தாம்பரத்திலிருந்து திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலையிலிருந்து தாம்பரத்துக்கும் பயணிப்போா் நேரடியாக பயணச்சீட்டு எடுத்து பயணிக்கலாம் என திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் தெரிவித்துள்ளாா்.

Updated On: 26 Oct 2023 6:08 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  2. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  3. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  4. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம் ! #annamalai #annamalaibjp ...
  7. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  8. பொன்னேரி
    சோழவரம் அருகே லாரி மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  10. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்