/* */

கார்த்திகை தீபம் திருவிழா: திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள்

கார்த்திகை தீப ஒளி திருவிழாவையொட்டி பொதுமக்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது

HIGHLIGHTS

கார்த்திகை தீபம் திருவிழா:  திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள்
X

பைல் படம்

கார்த்திகை தீப ஒளி திருவிழாவையொட்டி பொதுமக்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருவண்ணாமலை தீப திருவிழா வரும் 26ம் தேதி நடைபெறுகிறது. 27ம் தேதி பவுர்ணமி தினம். பயணிகளின் வசதிக்காக வரும் 26, 26, 27 ஆகிய 3 நாட்களுக்கும் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும், திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கும் ஐம்பது குளிர்சாதன இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது.

திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலை சென்று வர சிறப்பு பேருந்துகள் வரும் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை இயக்கப்பகிறது. www.tnstc.in மற்றும் tnstc mobile app- மூலம் முன்பதிவு செய்யலாம். என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருக்குடைகளுக்கு வரவேற்பு

காா்த்திகை தீபத் திருவிழாவுக்காக, திருவண்ணாமலைக்கு கொண்டு செல்லப்படும் திருக்குடைகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, சென்னையில் உள்ள இந்து ஆன்மிக சேவா சமிதி அறக்கட்டளை சாா்பில் தொடா்ந்து 10-ஆவது ஆண்டாக அருணாசலேஸ்வரருக்கு ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான 4 திருக்குடைகளை அளிக்க சிவனடியாா்கள் முன்வந்தனா்.

திருக்குடை ஊா்வலம்: அதன்படி, சென்னையை அடுத்த திருமுல்லைவாயிலில் உள்ள ஸ்ரீமாசிலாமணீஸ்வரா் கோயிலில் திருக்குடைகளுக்கு கடந்த 15-ஆம் தேதி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

பின்னா், சென்னை பாடி திருவல்லீஸ்வரா் கோயிலில் இருந்து புறப்பட்ட திருக்குடைகள் உபய யாத்திரை மாநகரில் உள்ள பல்வேறு கோயில்களுக்கும் கொண்டு செல்லப்பட்டன. தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை இரவு ஸ்ரீபெரும்புதூா் வழியாக காஞ்சிபுரம் வந்தடைந்தன. அவை திருவண்ணாமலை மாவட்டத்துக்கு திங்கள்கிழமை வந்து சேர்ந்தன.

முன்னதாக, அப்துல்லாபுரம் கிராமம் ஸ்ரீசந்திரமெளலீஸ்வரா் கோயில், தூசி கிராமம் ஸ்ரீஅகத்திஸ்வரா் கோயிலுக்குச் சென்ற திருக்குடைகள் உபய யாத்திரை செய்யாறு திருவோத்தூரில் உள்ள ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலை வந்தடைந்தது.

வேதபுரீஸ்வரா் கோயிலில் திருக்குடைகளுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னா் சேத்துப்பட்டு, அவலூா்பேட்டை வழியாக திருவண்ணாமலைக்குக் கொண்டு செல்லப்பட்டு கோவில் நிர்வாகத்தினரிடம் வழங்கினார்கள்.

Updated On: 21 Nov 2023 1:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...