/* */

திருவண்ணாமலைக்கு இன்று முதல் 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு பக்தர்கள் கிரிவலம் செல்ல வசதியாக இன்று முதல் 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

HIGHLIGHTS

திருவண்ணாமலைக்கு இன்று முதல் 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
X

பைல் படம்

பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு பக்தர்கள் கிரிவலம் செல்ல வசதியாக இன்று முதல் 3 நாட்கள் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இணையதளம் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வாரத்தின் இறுதி நாளான சனி, ஞாயிறு கிழமைகளில் போக்குவரத்து நெரிசல் சற்று அதிக அளவில் இருக்கும். இத்தகைய நாட்களில் வெளியூர்களில் தங்கி பணிபுரியும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவர். அத்துடன் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை என்றால் பேருந்து நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இத்தகைய நாட்களில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகளும் தமிழ்நாடு அரசு சார்பில் இயக்கப்பட்டு வருகிறது.

அதன்படி தற்போது, வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம் இன்று முதல் இயக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி 28/10/2023 அன்று திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு சென்னை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து கிருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் திருவண்ணாமலை கிரிவலம் செல்ல வசதியாக இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 29-ம் தேதி வரை 3 நாட்கள் சேலம், ஆத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் பெங்களூரு ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 150 சிறப்பு பேருந்துகள் திருவண்ணாமலைக்கு கூடுதல் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகிறது.

பயணிகள் அரசு விரைவு போக்குவரத்துக்கழக முன்பதிவு வழியாகவும், இணையதளம் (www.tnstc.in) மற்றும் App (tnstc bus ticket booking app) வழியாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

எனவே, பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்த்து பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளுமாறு அரசு போக்குவரத்துக்கழக கோட்ட நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Updated On: 27 Oct 2023 1:21 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  5. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  6. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  7. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  8. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  9. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  10. இந்தியா
    கேதார்நாத் கோயில் நடை திறப்பு!