சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
X

ஆம்னி வேனில் புகையிலை பொருட்களை கடத்தி வந்த மாரிமுத்து.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கடம்பூரில் ஆம்னி வேனில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சத்தியமங்கலம் அருகே கடம்பூரில் ஆம்னி வேனில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையம் செல்லும் சாலையில் குன்றி பிரிவு என்ற இடத்தில் கடம்பூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி வேனை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர்.

அப்போது, வேனில் 16 கிலோ 50 கிராம் எடையிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அடங்கிய பாக்கெட்டுகள் இருந்ததை கண்டனர். உடனே வேனில் வந்தவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் கோபியை அடுத்த நஞ்சகவுண்டன்பாளையம் புதுக்காடு பகுதியை சேர்ந்த வியாபாரியான மாரிமுத்து (வயது 48) என்பதும், அவர் கர்நாடக மாநிலம் ஊகியத்தில் இருந்து புகையிலை பொருட்களை வேனில் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து, மாரிமுத்துவை போலீசார் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 16 கிலோ 50 கிராம் எடையிலான புகையிலை பொருட்கள், ஆம்னி வேன் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!