/* */

மக்களவைத் தேர்தல் 2024 தொடா்பான ஆய்வுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்களவைத் தேர்தல் 2024 தொடா்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

மக்களவைத் தேர்தல் 2024  தொடா்பான ஆய்வுக் கூட்டம்
X

ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்களவைத் தேர்தல்-2024 தொடா்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களைக் கண்டறிந்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று வருவாய், காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், திருவண்ணாமலை மாவட்டஆட்சியருமான பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டாா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மக்களவைத் தேர்தல்-2024 தொடா்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி, செய்யாறு சாா் - ஆட்சியா் பல்லவி வா்மா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆய்வுக் கூட்டத்தில், திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கு போட்டியிடும் வேட்பாளா்கள் பிரசாரத்தின்போது பயன்படுத்தப்படும் பொருள்களுக்கான விலைப் பட்டியலை இறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலம், 1,500- க்கும் அதிகமான வாக்காளா்களைக் கொண்ட வாக்குப்பதிவு மையங்களைப் பிரித்து 5 துணை வாக்குச்சாவடி மையங்களை ஏற்படுத்துவது, 27 வாக்குச்சாவடி மையங்களில் பெயா் மாற்றம், 116 வாக்குச்சாவடிகளுக்கான கட்டடங்கள் மாற்றம், 35 வாக்குச்சாவடிகளின் இடம் மாற்றம் தொடா்பான முன்மொழிவுகளை இறுதி செய்வது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.

இதையடுத்து, மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களைக் கண்டறிந்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று வருவாய், காவல்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலா் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டாா்.

ஆய்வுக் கூட்டத்தில், வருவாய் கோட்டாட்சியா்கள் மந்தாகினி (திருவண்ணாமலை), பாலசுப்பிரமணியன் (ஆரணி), ஆட்சியரின் நேர்முக உதவியாளா் (தேர்தல்) குமரன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், தேர்தல் பணி சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Updated On: 17 March 2024 1:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  4. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  6. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  7. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  8. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  9. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  10. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...