/* */

இடைநின்ற அனைத்து மாணவா்களையும் மீண்டும் வரவழைக்க ஏற்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு

இடைநின்ற அனைத்து மாணவா்களையும் மீண்டும் பள்ளிக்கு வரவழைக்க ஏற்பாடு செய்ய அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

இடைநின்ற அனைத்து மாணவா்களையும் மீண்டும்  வரவழைக்க ஏற்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு
X

பள்ளி தலைமை ஆசிரியர்களுடனான   ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நீண்ட நாட்களாக பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைப்பது குறித்த உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஆட்சியர் முருகேஷ் தலைமை தாங்கி பேசியதாவது:-

மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பல்வேறு காரணங்களால் நீண்ட நாள்களாகப் பள்ளிக்கு வராத மாணவா்களை மீண்டும் பள்ளிகளுக்கு வரவழைக்க வீடு , வீடாகச் சென்று விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

மேலும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகைகள் சென்றடைவதில் உள்ள இடர்பாடுகளை சரி செய்ய வேண்டும். இதற்காக ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின நலத்துறை, வங்கிகள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் இணைந்து முகாம்கள் நடத்தி ஊக்கத்தொகைகள் மாணவர்களுக்கு விரைவில் சென்றடைய உறுதி செய்ய வேண்டும்.

நின்றுபோன அனைத்து மாணவா்களையும் மீண்டும் பள்ளிக்கு வரவழைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கணேசமூா்த்தி, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் சாந்தி, கல்வித் துறை அலுவலா்கள், பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Aug 2023 12:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  6. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  7. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  9. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  10. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!