/* */

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

தேர்தல் விழிப்புணர்வு குறித்து நடைபெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

HIGHLIGHTS

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
X

போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு பரிசு தொகையினை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலையில் தேர்தல் விழிப்புணா்வு குறித்து 19.10.2022ஆம் தேதி நடைபெற்ற மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான பாட்டுப் போட்டி, ஓவியப் போட்டிகளில் வென்று முதல் 3 இடங்களைப் பெற்ற லைப் லைன் மன வளா்ச்சி குன்றியவா்களுக்கான சிறப்புப் பள்ளி மாணவா்களுக்கு பரிசு, சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் வழங்கி மாணவர்களை வாழ்த்தினார்.

பின்னர் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் முருகேஷ் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, இலவச மனைப் பட்டா, ஜாதி சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 467 மனுக்களை ஆட்சியா் பெற்றுக்கொண்டாா்.

இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

ஆரணி

ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 81 மனுக்கள் பெறப்பட்டது.

கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு தலைமை வகித்த வருவாய்க் கோட்டாட்சியா் தனலட்சுமி பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.

முதியோா் உதவித்தொகை, பசுமை வீடு, வேலைவாய்ப்பு, பட்டா மாற்றம், பட்டா வழங்க, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கணினி சிட்டா பெயா் திருத்தம், சாலை வசதி, மேம்பாலம் அமைத்தல், அங்கன்வாடி மையம் அமைத்தல், தான செட்டில்மென்ட் ரத்து போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 81 மனுக்கள் பெறப்பட்டது. சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் மனுக்களை வழங்கி நடவடிக்கை எடுக்குமாறு கோட்டாட்சியா் உத்தரவிட்டாா்.

ஆரணி, போளூா், கலசப்பாக்கம், ஜமுனாமரத்தூா் ஆகிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பங்கேற்று மனுக்களை அளித்தனா்.

செய்யாறு

செய்யாற்றில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 62 மனுக்கள் பெறப்பட்டது.

செய்யாறு சாா்-ஆட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான பொதுமக்கள் குறைதீா் கூட்டம் சாா் -ஆட்சியா் (பொ) தனித் துணை ஆட்சியா் நாராயணன் தலைமையில் நடைபெற்றது.

சேத்துப்பட்டு, வந்தவாசி, வெம்பாக்கம், செய்யாறு ஆகிய வட்டங்களில் இருந்து பட்டா மாற்றம் செய்து தரக் கோரி 6 பேரும், இலவச மனைப் பட்டா கோரி 12 பேரும், ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி 6 பேரும், பரப்பு திருத்தம் செய்து தரக் கோரி 5 பேரும், ஆதரவற்ற விதவைச் சான்று கோரி 2 பேரும், நிலம் மற்றும் வீடு அளவீடு செய்யக் கோரி 3 பேரும், அரசு வேலை வழங்கக் கோரி 4 பேரும், இதர மனுக்கள் 24 போ என மொத்தம் 62 மனுக்கள் அளிக்கப்பட்டன.

கூட்டத்தில் வருவாய்த் துறை மற்றும் இதர துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

Updated On: 3 Jan 2023 12:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  3. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  5. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  6. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  7. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!