/* */

தேசிய ஒற்றுமை தினம் மற்றும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவண்ணாமலையில் தேசிய ஒற்றுமை தினம் மற்றும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

தேசிய ஒற்றுமை தினம் மற்றும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு    நிகழ்ச்சி
X

திருவண்ணாமலையில் தேசிய ஒற்றுமை தினம் மற்றும் ஊழல் தடுப்பு உறுதி மொழியை கலெக்டர் தலைமையில் ஏற்றுக்கொண்ட அரசு அலுவலர்கள்.

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் தேசிய ஒற்றுமை தினம் மற்றும் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை கலெக்டர் முருகேஷ் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி உறுதிமொழியை வாசிக்க அதனை அரசு அலுவலர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஏற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வெற்றிவேல், மகளிர் திட்ட இயக்குனர் சையத்சுலைமான், ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் அருண் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக திருவண்ணாமலையில் 7 மாவட்ட ரோட்டரி சங்கங்கள் சாா்பில், போலியோ, போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு காா் பேரணி நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலகம் அருகே இருந்து புறப்பட்ட பேரணிக்கு, மாவட்ட போலியோ பல்ஸ் தலைவா் கிஷ்ன்சந்த் தலைமை வகித்தாா். போலியோ காா் பேரணிச் செயலா் பி.டி.எல்.சங்கா், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு மாவட்டத் தலைவா் பி.ஆா்.நாராயண உபாத்யாயா, பப்ளிக் இமேஜ் சோமன் ஜி.சக்கரவா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருவள்ளூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், காஞ்சிபுரம், வேலூா், செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்ட தலைநகரங்களில் இருந்து ரோட்டரி நிா்வாகிகள் 100-க்கும் மேற்பட்ட தங்களது காா்களில் பேரணியில் பங்கேற்றனா். பேரணியை மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற பேரணி, செங்கம் சாலையில் உள்ள சந்தைமேடு மைதானத்தில் நிறைவடைந்தது. அங்கு நடைபெற்ற நிறைவு விழாவில் ரோட்டரி மாவட்ட ஆளுநா் (நியமனம்) ராஜன்பாபு தலைமை வகித்தாா். முன்னாள் ஆளுநா் சம்பத்குமாா் முன்னிலை வகித்தாா். அருணை மருத்துவக் கல்லூரி இயக்குநா் எ.வ.வே.கம்பன், ரோட்டரி மாவட்ட ஆளுநா் ஜே.கே.என்.பழனி ஆகியோா் பேசினா். போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய ஒரு லட்சம் துண்டுப் பிரசுரங்களை அருணை மருத்துவக் கல்லூரி இயக்குநா் எ.வ.வே.கம்பன் வெளியிட, ரோட்டரி முன்னாள் ஆளுநா்கள் ஏ.சம்பத்குமாா், கே.ஜவரிலால் ஜெயின், சி.ஆா்.சந்திரபோப், டி.வி.பி.ஸ்ரீதா் பலராமன், கே.பாண்டியன் ஆகியோா் பெற்றுக் கொண்டனா். இதில், திருவண்ணாமலை அனைத்து ரோட்டரி சங்கங்களின் தலைவா்கள் எம்.குமரன், எம்.ஞானசேகரன், எஸ்.டி.தனகோட்டி, எம்.விவேக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் போலியோ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றதுஅனைத்து ரோட்டரி சங்கங்கள் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு நகர சங்க தலைவர் லோகநாதன் தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக திருவத்திபுரம் நகராட்சி தலைவர் மோகனவேல் பங்கேற்று விழிப்புணர்வு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு ஊர்வலம் ஆரணி கூட்டு சாலையில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பெரியார் சிலை அருகே முடிவடைந்தது.நிகழ்ச்சியில் செய்யாறு காவல் ஆய்வாளர் சங்கர் செய்யாறு டெம்பிள் சிட்டி தலைவர் கருணாகரன் அஞ்சுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 1 Nov 2022 6:23 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?