/* */

திருவண்ணாமலை தொகுதி வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் வேலு பிரசாரம்..!

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ஆதரித்து அமைச்சர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்

HIGHLIGHTS

திருவண்ணாமலை தொகுதி வேட்பாளரை  ஆதரித்து அமைச்சர் வேலு பிரசாரம்..!
X

திமுக வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து பேசிய அமைச்சர் வேலு

தமிழகத்தில் விவசாயிகளுக்கு கடந்த இரண்டு வருடத்தில் 2 லட்சம் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, கந்திலி ஒன்றியப் பகுதிகளில் திருவண்ணாமலை மக்களவை தொகுதி வேட்பாளா் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் எ.வ.வேலு வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியது:

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சி நடந்து வருகிறது. திராவிட மாடல் ஆட்சி என்றால் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும். மத்திய அரசால் விலைவாசி உயர்வில் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்தியா கூட்டணி வெற்றி பெறவும் இந்திய நாட்டை காப்பாற்றுவதற்காக திமுகவிற்கு வாக்களிக்க கேட்டுக் கொள்கிறேன்.

தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத காலை உணவு திட்டம் தமிழ்நாட்டில் மட்டும்தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண் பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் அடைய புதுமைப் பெண் திட்டம், மகளிா் இலவச பேருந்து திட்டம் போன்றவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக விவசாயிகளுக்கு இரண்டு வருடத்தில் இரண்டு லட்சம் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மகளிர் சுய உதவி கடன் ரத்து செய்யவும், காலை சிற்றுண்டி திட்டம், புதுமைப்பெண் திட்டம், கலைஞரின் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட திட்டங்களுக்கு நடைமுறைப்படுத்தி பெண்களுக்கான ஆட்சியாக நமது முதல்வர் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக உள்ளார்.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் ஜிஎஸ்டி வரி விதிப்பு, தங்கம் விலை உயா்வு, அரசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்ந்துவிட்டது.

மேலும், டீசல், பெட்ரோல், எரிவாயு விலை குறைப்பு என சொன்னாா்கள் செய்யவில்லை.

தமிழ்நாட்டின் வளா்ச்சிக்காக மக்களாட்சி நடத்தி வரும் திமுக அரசின் திருவண்ணாமலை மக்களவை உறுப்பினராக போட்டியிடும் சி.என்.அண்ணாதுரைக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என அமைச்சர் வேலு பேசினார்.

நிகழச்சியில், எம்எல்ஏ-க்கள் தேவராஜி, நல்லதம்பி, நகர செயலாளா்கள் ராஜேந்திரன், அன்பழகன் ஒன்றிய செயலாளர், மாநில மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள், கவுன்சிலர்கள், அணி அமைப்பாளர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள், திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 12 April 2024 3:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு