/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர் வேண்டுகோள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர் வேலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர் வேண்டுகோள்
X

அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களைக் காக்க திமுகவினா் தண்ணீா் பந்தல்களைத் திறக்க வேண்டும் என்று அமைச்சா் எ.வ.வேலு கேட்டுக் கொண்டாா்.

திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.

தமிழ்நாட்டில் இயற்கையின் சமநிலையற்ற தன்மையாலும், பருவநிலை மாற்றங்களாலும் ஆண்டுதோறும் கோடை வெயில் உச்சம் தொடுகிறது. மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 100 டிகிரியை கடந்து வெயில் சுட்டெரிக்கிறது. எனவே, வானிலை ஆய்வு மையம் வெயில் பாதிப்பு தொடர்பாக எச்சரிக்கை விடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரிவெயில் வரும் 4 ம் தேதி தொடங்கி, 29 ம் தேதி நிறைவடைகிறது. ஆனாலும், அக்னி நடத்திரம் தொடங்கும் முன்பே வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. கடந்த ஒரு வாரமாக அக்னி நட்சத்திர வெயிலை விட மிகக்கடுமையான வெயில் சுட்டெரிக்கிறது. மேலும், கோடை காலத்தில் வெப்பத்தை தணிக்கும் வகையில் எதிர்பாராமல் பெய்யும் கோடை மழையும் இதுவரை கைகொடுக்கவில்லை. எனவே, வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் தவியாய் தவிக்கின்றனர்.

திருவண்ணாமலையில் நேற்று கோடை வெயில் சுட்டெரித்தது. அதனால், வெயில் அளவு 105 டிகிரியாக பதிவானது.

இந்நிலையில் அமைச்சர் வேலு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களைக் காக்க திமுகவினா் தண்ணீா் பந்தல்களைத் திறக்க வேண்டும்

எனவே, கோடை வெப்பத்தை சமாளிக்கவும், பொதுமக்களின் தாகத்தை தீா்க்கவும் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் திமுகவினா் தண்ணீா், மோா் பந்தல்களைத் திறக்க வேண்டும்.

தண்ணீா் பந்தல்களில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக இளநீா், தா்பூசணி, முலாம்பழம், வெள்ளரி பிஞ்சுகள், குளிா் பானங்கள், மோா், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் ஆகியவற்றை போதுமான அளவு வைத்திருக்க வேண்டும்.

காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் தாகம் தீா்க்கும் வரை தண்ணீா் பந்தல்கள் செயல்பட வேண்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளாா்.

Updated On: 26 April 2024 12:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  3. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  4. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...
  5. வீடியோ
    🔴LIVE : Annamalai-யை படம் பார்க்க அழைத்தேன் | Ameer பகீர் தகவல் |...
  6. லைஃப்ஸ்டைல்
    முதுமையின் மூன்றாம் கால்..! அவளுக்கு அவனும்; அவனுக்கு அவளும்..!
  7. குமாரபாளையம்
    நகராட்சி துப்புரவு பணியாளர் தற்கொலை!
  8. ஈரோடு
    ஈரோட்டில் சுசி ஈமு நிறுவன அசையா சொத்துகள் ஏலம் ரத்து!
  9. திருப்பரங்குன்றம்
    மதுரையில் பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  10. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக களம் இறங்கிய எதிர்க்கட்சிகள்...