நகராட்சி துப்புரவு பணியாளர் தற்கொலை!

நகராட்சி துப்புரவு பணியாளர் தற்கொலை!
X
குமாரபாளையம் நகராட்சி துப்புரவு பணியாளர் தற்கொலை செய்து கொண்டார்.

நகராட்சி துப்புரவு பணியாளர் தற்கொலை

குமாரபாளையம் நகராட்சி துப்புரவு பணியாளர் தற்கொலை செய்து கொண்டார்.

குமாரபாளையம் நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருபவர் சிவா, 45. இவரது மனைவி ஜாஸ்மின் ஹேமா, 39. சிவா தினமும் குடித்து விட்டு வருவதால், கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது. நேற்றுமுன்தினம் பள்ளிபாளையம் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் முடிந்து, இரவு 08:00 மணியளவில், குமாரபாளையம் ராஜாஜி குப்பத்தில் உள்ள வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீடு உள் பக்கமாக தாழ்பாள் போடப்பட்டிருந்தது. உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, வீட்டில் உள்ள அறையில், தன் லுங்கியில் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் சிவா இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். கீழே இறக்கி, குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று காட்டிய போது, இவரை பரிசோதித்த டாக்டர் , சிவா இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து இவரது மனைவி, ஜாஸ்மின் ஹேமா குமாரபாளையம் போலீசில் புகார் கொடுக்க, போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!