/* */

பத்திரிகை, திராவிடம் இரண்டையும் பிரித்து பார்க்க முடியாது: அமைச்சர் எ.வ.வேலு

பத்திரிகை, திராவிடம் இரண்டையும் பிரித்து பார்க்க முடியாது, இந்த ஆட்சிக்கு பத்திரிகை நண்பர்கள் துணையாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்

HIGHLIGHTS

பத்திரிகை, திராவிடம் இரண்டையும் பிரித்து பார்க்க முடியாது: அமைச்சர் எ.வ.வேலு
X

நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் வேலு மற்றும் அதிகாரிகள்

திருவண்ணாமலை: பத்திரிகையாளர்கள் நல வாரிய உறுப்பினர்கள் அட்டை வழங்கும் விழா செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் பிச்சாண்டி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மாவட்ட ஆட்சியர் முருகேஷ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி மற்றும் சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட பத்திரிகையாளர் நல வாரிய உறுப்பினர் அட்டை வழங்கி பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு உரையாற்றினார். அப்போது அமைச்சர் எ.வ.வேலு, பேசுகையில்

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தலின்போது திமுக ஆட்சி அமைந்த உடன் பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம் அமைப்பேன் என்று கூறியதன் அடிப்படையில் திமுக ஆட்சி அமைந்த உடன் முதலமைச்சர் ஸ்டாலின் பத்திரிகையாளர்களுக்கு நல வாரியத்தை அமைத்தார்.

பத்திரிகையையும், திராவிடத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. சமுதாயத்தில் அரசையும், பத்திரிகையாளர்களையும் ஒருபோதும் பிரித்துப் பார்க்க முடியாது. ஏனெனில் அவை ஒன்றுடன் ஒன்று வேரோடு பின்னிப்பிணைந்தது. இந்த ஆட்சியின் நோக்கமே திராவிட மாடல் ஆட்சி, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையாகத்தான் தற்போதைய திமுக அரசு அமைந்துள்ளது.

ஜனநாயக நாட்டிலே 4 தூண்கள் என்று சொன்னால், அதில் ஒரு தூண் பத்திரிகைதான். ஒரு ஜனநாயகத்தில் பத்திரிகையாளரின் பங்கு முக்கியமானது. ஒரு ஜனநாயக நாட்டை உருவாக்க எப்படி சட்டமன்ற உறுப்பினர்கள் தேவையோ, அதுபோல பத்திரிகை துறை தேவை.

எப்படி சட்டமன்றம், நீதிமன்றத்தில் வரைமுறை இருக்கின்றதோ, அதுபோல சமுதாயத்தின் வளர்ச்சிக்காக பல வரைமுறைகள் உள்ளது. ஆனால், பயிர்களில் உள்ள களைகள் போல, நல்லது செய்வதில் இடையூறு செய்வதுபோல பல பத்திரிகைகள் தலையங்கம் என்ற பேரில் பல காரியங்களை செய்து கொண்டு இருக்கிறது. தற்போது உள்ள காலத்தில் பத்திரிகையில் ஒரு நியாயத்தை சொன்னால் அது சரியாக மக்களிடம் சென்று சேர்கிறது.

அரசாங்கத்தின் நிகழ்வுகளை நாட்டு மக்களுக்கு கொண்டு சேர்ப்பது பத்திரிகை துறைதான். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பத்திரிகையாளர்களுக்கு பல நல திட்ட உதவிகளை ஏற்படுத்தினாரோ, அதேபோல் தற்போதைய முதலமைச்சர் .ஸ்டாலின் பத்திரிகையாளர்களுக்கு நல வாரியத்தை ஏற்படுத்தி கொடுத்தார். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த விடுதலை என்ற பத்திரிகை பெரிதும் பங்காற்றியது.

குறிப்பாக, தற்போதைய திமுக ஆட்சி என்பது அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதற்காக நடுநிலையாக நடைபெற்று வருகிறது. ஆகவே, இந்த ஆட்சிக்கு பத்திரிகை நண்பர்கள் துணையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் பார்வதி சீனிவாசன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சதிஷ் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 11 Jun 2023 2:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - என் காதல் தேவதைக்கு வாழ்த்துகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    என்னுள் நிறைந்தவளுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  4. வீடியோ
    மேடையிலேயே Cool Suresh செய்த சேட்டை அதிர்ச்சியில் உறைந்த நடிகைகள்...
  5. வீடியோ
    🔴LIVE :இளைஞர்களின் உணர்வுகளையும்,தியாகத்தையும் சீமான் வியாபாரம்...
  6. வீடியோ
    கதாநாயகி இல்லாத குறையை தீர்த்த Cool Suresh ! #coolsuresh...
  7. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  8. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  9. ஈரோடு
    புஞ்சை புளியம்பட்டி அருகே அரசு பேருந்தின் மீது கல்வீசி கண்ணாடியை...
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு