/* */

திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை: நீதிமன்ற உத்தரவையடுத்து ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைய உள்ள இடத்தில் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் கருணாநிதி சிலை: நீதிமன்ற உத்தரவையடுத்து ஆட்சியர் ஆய்வு
X

முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைய உள்ள இடத்தில் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வேங்கிக்காலில் அண்ணா நுழைவாயில் அருகே கிரிவலபாதை இணையுமிடத்தில் திமுக சார்பாக மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் சிலை அமைக்கப்படுவதற்கான வேலைகள் நடந்து வருகின்றது.

இந்நிலையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். அதில், திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் பொது இடத்தை ஆக்கிரமித்து கருணாநிதி சிலை வைக்க திமுக நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியுள்ளார்.

மேலும் அங்கு பக்தர்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். கிரிவலப்பாதையில் மாநில நெடுஞ்சாலை இணையுமிடத்தில் சிலையை நிறுவ பில்லர் அமைக்கும் வேலைகள் நடைபெற்று வருகின்றது. இங்கு சிலை அமைக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். மேலும் பக்தர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். அதனால் சிலை வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இது நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், நீதிபதிகள், வருவாய் துறையினரும், திருவண்ணாமலை ஆட்சியரும் சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு இருந்தார்.

உத்தரவின் பெயரில் ஆட்சியர் முகேஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

மேலும் வரைபடத்தை பார்வையிட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருக்கின்றதா என ஆய்வு செய்தார். ஆட்சியருடன் வருவாய்த் துறையினரும் நெடுஞ்சாலைத் துறையினரும் உடனிருந்தனர்.

Updated On: 20 May 2022 12:57 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...