/* */

திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் ஜெயலலிதா படம் அகற்றம்: குவிந்த அதிமுகவினர்

திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் அறையில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்கள் அகற்றம்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் ஜெயலலிதா படம் அகற்றம்: குவிந்த அதிமுகவினர்
X

அகற்றப்பட்ட முன்னாள் முதலமைச்சர்களின் படங்களை வருவாய்த்துறையினர் மீண்டும் அதே இடத்தில் வைத்தனர்.

திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் அறையில் முன்னாள் முதல்-அமைச்சர்களின் படங்கள் வைக்கப்பட்டு இருந்தது. கடந்த 3-ந் தேதி முதல் இன்று வரை தாலுகா அலுவலகத்தில் ஆட்சியர் முருகேஷ் தலைமையில் ஜமாபந்தி நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்த நிலையில் இன்று தாசில்தார் அறையில் வைக்கப்பட்டு இருந்த முதல்-அமைச்சர்களின் படங்கள் வரிசையில் இருந்து ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரது படங்கள் அகற்றப்பட்டது. அவை தாலுகா அலுவலக வளாகத்தில் பின்புறத்தில் ஒரு ஓரத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இதை கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இதுகுறித்த தகவல் சமூக வலைதளத்தில் பரவியது. இதையறிந்த திருவண்ணாமலை அ.தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. உத்தரவின் பேரில் அ.தி.மு.க.வினர் 50-க்கும் மேற்பட்டவர்கள் தாலுகா அலுவலகத்தில் குவிந்தனர். அப்போது அங்கு ஜமாபந்தி நிறைவு விழா நடைபெற்று கொண்டிருந்தது. இதற்கிடையில் முன்னாள் முதல்- அமைச்சர்கள் படங்கள் அகற்றப்பட்ட தகவல் வெளியே பரவியதை அறிந்த வருவாய் துறையினர் மீண்டும் தாசில்தார் அறையில் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி படங்களை வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். முதலில் ஜெயலலிதா படத்தை வைத்தனர். அப்போது அங்கு வந்த அ.தி.மு.க.வினர் அகற்றப்பட்ட அ.தி.மு.க. முன்னாள் முதல்-அமைச்சர்களின் படங்களை வைக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து வருவாய் துறையினர் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி படத்தை வாங்க சென்றனர். மேலும் ஜமாபந்தி விழா நிறைவடைந்த பின்னர் தாசில்தார் அறைக்கு வந்த ஆட்சியரிடம் அ.தி.மு.க.வினர் அகற்றப்பட்ட முன்னாள் முதல்-அமைச்சர்களின் படங்களை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்று அவர் உடனடியாக படங்களை மீண்டும் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். பின்னர் அவர்கள் எடப்பாடி பழனிசாமி படம் வைக்கும் வரை இருந்து விட்டு பின்னர் கலைந்து சென்றனர். இதுகுறித்து அ.தி.மு.க. நிர்வாகிகள் கூறுகையில், அகற்றப்பட்ட முன்னாள் முதல்- அமைச்சர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரது படங்கள் வைக்க வேண்டும் என்று ஆட்சியரிடம் மனு அளித்து உள்ளோம். தாசில்தார் அறையில் இடம் ஏற்படுத்தி படங்கள் வைக்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார் என்று கூறினார்.

Updated On: 13 Jun 2022 1:19 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு