/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 75வது சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
X

விக்டோரியா இந்து நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் பள்ளியின் இணைத் தாளாளர் லட்சுமி நரசிம்மன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்,  உடன் ஆசிரியர்கள் 

திருவண்ணாமலை மாவட்டத்தில் 75வது சுதந்திர தின விழா பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது

திருவண்ணாமலை விக்டோரியா இந்து நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் பள்ளியின் இணைத் தாளாளர் லட்சுமி நரசிம்மன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து, பேச்சுப்போட்டி கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் நிர்வாக குழு உறுப்பினர்கள், தலைமை ஆசிரியர் பராசக்தி மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர் ..

அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மருத்துவக் கல்லூரியின் நிர்வாக இயக்குனர் டாக்டர் எ. வ. வே. கம்பன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். கல்லூரியின் முதல்வர் டாக்டர் குணசீன், கண்காணிப்பாளர் டாக்டர் குப்புராஜ், பேராசிரியர் டிவிஎஸ் .ஆர். சேஷாத்திரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தியாகி அண்ணாமலை பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆறுமுகம் தேசிய கொடியினை ஏற்றி வைத்து கலை நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர் சீனிவாசன், பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக் குமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை தேரடி வீதியில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் நகர மன்ற உறுப்பினர் சந்திரபிரகாஷ் தேசியக்கொடி ஏற்றி வைத்து மாணவ மாணவிகளுக்கு, பரிசுகள் மற்றும் இனிப்புகளை வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் ரஷீத் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

கலசப்பாக்கம்

கலசப்பாக்கம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் மன்ற வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் நீதிபதி காளி முத்துவேல் தேசிய கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார் நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

படவேடு ரேணுகாம்பாள் அம்மன் கோவிலில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொது விருந்து மற்றும் நல திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார் நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் சிவஞானம் போளூர் சேர்மன் சாந்தி பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

போளூர்

போளூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் நீதித்துறை நடுவர் காளி முத்துவேல் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கண்ணமங்கலம் அடுத்த படவேடு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டம் ஊராட்சி தலைவர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் போளூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள்,பாபு, பரணிதரன் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் தாமரைச்செல்வி பஞ்சாயத்து செயலாளர் பவுன் குமார் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

ஆரணி

ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி விஜயா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் உடன் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

ஆரணி நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற தலைவர் மணி தேசிய கொடியை ஏற்றி வைத்தார் நகராட்சி ஆணையாளர் தமிழ்ச்செல்வி மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கோட்டாட்சியர் தனலட்சுமி தேசிய கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார் நிகழ்ச்சியில் தாசில்தார் ஜெகதீசன் டி எஸ் பி ரவிச்சந்திரன் வருவாய்த்துறை அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செங்கம்

செங்கம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பேரூராட்சி தலைவர் சாதிக் பாஷா தேசிய கொடியை ஏற்றி வைத்தார் நிகழ்ச்சியில் செயல் அலுவலர் உமா மகேஸ்வரி மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செங்கம் அடுத்துள்ள புதுப்பாளையம் பேரூராட்சியில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பேரூராட்சி தலைவர் செல்வ பாரதி மனோஜ் குமார் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு தலைவர் பரிமளா கலையரசன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செங்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரும்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் கிரி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற ஊழியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Updated On: 15 Aug 2022 3:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  3. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  5. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  6. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  7. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!