/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 746 மனுக்கள் பெறப்பட்டது

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்
X

மாற்றுதிறனாளிகளிடமிருந்து  கோரிக்கை  மனுக்களை  பெற்றுகொண்ட  ஆட்சியர் முருகேஷ் 

திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி , செய்யாறு தாலுகாக்களில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.கூட்டத்திற்கு ஆட்சியர் முருகேஷ் தலைமை வகித்தார். இதில் முதியோா், மாற்றுத்திறனாளிகள், கல்லூரி மாணவ-மாணவிகளிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, இலவச மனைப் பட்டா, ஜாதி சான்றிதழ், வேலை வாய்ப்பு, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 746 மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.

இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் வெங்கடேசன், தாட்கோ மேலாளா் ஏழுமலை, திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் மந்தாகினி, பழங்குடியினா் நலத் திட்ட இயக்குநா் செந்தில்குமாா், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் கந்தன் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

ஆரணி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 57 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன.

கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மண்டல துணை வட்டாட்சியா்கள் தேவி, தட்சிணாமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோட்டாட்சியா் தனலட்சுமி தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றாா்.

இலவச மனைப் பட்டா, பட்டா மாற்றம், பட்டா ரத்து, ஆக்கிரமிப்பு அகற்றம், உள்பிரிவு செய்யக் கோருதல், சா்வே எண் மாற்றம், யு.டி.ஆா்.திருத்தம், பட்டா மாறுதல் செய்ய ஆட்சேபனை, தமிழறிஞா் உதவித்தொகை, செம்மண் கடத்தல் தொடா்பாக, வரைபடம் திருத்தம், வாரிசு சான்றிதழ், நிலம் அளவீடு, கால்வாய் ஆக்கிரமிப்பு, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடமிருந்து 57 வரப்பெற்றன.

இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

ஆரணி நகரில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆணையாளரிடம் மனு கொடுத்தனர்.

ஆரணி சைதாப்பேட்டை பகுதியில் 13-வது வார்டுக்கு சம்பந்தப்பட்ட கமண்டல நாக நதி தெருவில் தனியார் செல்போன் டவர் அமைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நகரமன்ற துணைத்தலைவர் பாரி பி.பாபு தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி ஆணையாளர் குமரன் மற்றும் நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி ஆகியோரிடம் அந்த பகுதியில் தனியார் செல்போன் டவர் அமைக்க நகராட்சி அனுமதிக்க கூடாது என கோரிக்கை மனு வழங்கினார். அப்போது நகரமன்ற உறுப்பினர்கள் விநாயகம், சுதா குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Updated On: 12 Sep 2023 12:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.