/* */

திருவண்ணாமலை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி

திருவண்ணாமலை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி
X

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் யோகலட்சுமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அரசு பணியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.

அரசுப் பணியில் சேர போட்டித் தேர்வில் பங்கேற்கும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் திருவண்ணாமலை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. அதன்படி IAS , IPS, RRB, போன்ற போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மையத்தில் செயல்படும்.

இப்பயிற்சி வகுப்பு வார நாட்களில் திங்கள் புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். தேர்வுக்கு தேவையான பாடப் பிரிவுகளுக்கு தனித்தனி ஆசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படுவதுடன் ஒவ்வொரு வாரமும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெறும் இலவச பயிற்சி வகுப்பில் நேரடியாக கலந்துகொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Updated On: 1 Nov 2021 8:40 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...