/* */

யூரியாவுடன் இணை பொருட்கள் கட்டாயப்படுத்தி விற்பனை: விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

யூரியாவுடன் இணை பொருட்கள் கட்டாயப்படுத்தி விற்பனை செய்வதாக கூறி வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டம்.

HIGHLIGHTS

யூரியாவுடன் இணை பொருட்கள் கட்டாயப்படுத்தி விற்பனை: விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
X

வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

யூரியா வாங்கும்போது அதனுடன் இணை பொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்வதை கண்டித்து திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். போராட்டத்திற்கு கீழ்பென்னாத்தூர் தாலுகா செல்லங்குப்பத்தை சேர்ந்த தமிழ்நாடு விவசாய சங்கத்தை சேர்ந்த ரஜினி ஏழுமலை தலைமை தாங்கினார். போராட்டம் குறித்து அவர்கள் கூறுகையில்,

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 7 மாத காலமாக நிலவி வரும் யூரியா சம்பந்தமான முறைகேடுகளை ஆதாரத்துடன் எடுத்து கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. யூரியாவுடன் இணை பொருட்கள் கட்டாயப்படுத்தி விற்பனை செய்தல், கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல் போன்ற முறைகேடுகளில் தொடர்புடைய உரக்கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கலப்பு உரம் தயாரித்து விற்பனை செய்யும் தனியார் உரக் கம்பெனிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறை அதிகாரி மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதம மந்திரி கிசான் நிதியை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் போலீசார் மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்குப் பின் விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Updated On: 27 May 2022 11:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  3. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  4. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  5. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  6. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  7. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  8. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  9. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!