/* */

திருவண்ணாமலையில் வங்கிகள் நடத்திய கல்விக்கடன் முகாம்

திருவண்ணாமலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் 20-க்கும் மேற்பட்ட வங்கிகள் இணைந்து நடத்திய கல்விக்கடன் முகாம் நடைபெற்றது

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் வங்கிகள் நடத்திய கல்விக்கடன் முகாம்
X

மாணவர்களுக்கு கடனுதவி வழங்கிய துணை சபாநாயகர்

திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள கலைஞர் கருணாநிதி அரசு கலை கல்லூரி வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்திய கல்விக்கடன் முகாம் நேற்று நடைபெற்றது. அதில் 20-க்கும் மேற்பட்ட தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.

இம்முகாமிற்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமை தாங்கினார் .

மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், இந்தியன் வங்கியின் திருவண்ணாமலை மண்டல மேலாளர் அருண்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கவுரி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முகாமினை தொடங்கி வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து அவர் 123 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2 கோடியே 73 லட்சம் மதிப்பிலான கல்வி கடனுதவியினை வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், கல்வித்துறையின் மூலமாக 'நான் முதல்வன்' திட்டத்தை முதலமைச்சர் செயல்படுத்தி, ஆய்வு செய்து அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்ற நிலையிலேயே உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் எல்லா பகுதி மக்களும் படிக்க வேண்டும் என்பதற்காக அரசு கல்லூரியில் கல்விகடன் முகாம் இன்றைக்கு தொடங்கப்பட்டு உள்ளது.

திராவிட மாடல் ஆட்சியை போல வேறு எந்த மாநிலத்திலாவது இவ்வளவு சலுகைகள் ஏழை, எளிய மக்களுக்காக வழங்கப்படுகிறதா என்றால் இல்லை. குறைவான 8.2 சதவீதம் வட்டியில் இந்த கல்வி கடன் வழங்கப்படுகிறது.

நமக்கு கடன் கொடுத்து நம்மை ஒரு சிறந்த வேலைக்கு செல்ல உறுதுணையாக இருந்தது இந்த வங்கி தான் என்ற எண்ணத்தை மனதில் கொண்டு அந்த கடன்களை கட்டக்கூடிய எண்ணத்தை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும்.

பெற்றோர்களும் கல்வி கடனை பெறக்கூடியவர்கள் நீங்களும் அதை திரும்ப செலுத்தக்கூடிய மனப்பான்மையோடு கடன்களை பெற வேண்டும். சாதாரண ஏழை, எளிய மக்கள் எல்லாரும் அவர்களுடைய குழந்தைகள் நல்ல கல்வியை பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு தமிழ்நாடு அரசு செயல்படுகிறது. இன்றைக்கு தமிழகம் பல வளர்ச்சிகள் அடைந்து இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு வளர்ச்சிகளை பெற்றுக் கொண்டிருக்கிறது என்று பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் தனக்கீர்த்தி, திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி முதல்வர் கணேசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், அனைத்து வங்கி சார்ந்த அலுவலர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 12 Aug 2023 1:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  2. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  3. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  4. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  5. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  6. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  7. வீடியோ
    பெத்தப் பிள்ளைய பாதுகாக்க வக்கில்ல ! #veeralakshmi #savukkushankar...
  8. கோவை மாநகர்
    கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
  9. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  10. கோவை மாநகர்
    கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...