/* */

குப்பை கொட்டும் பிரச்சினை தொடர்பாக அமைச்சர் முன்னிலையில் பேச்சுவார்த்தை

திருவண்ணாமலை அருகே குப்பை கிடங்கை அகற்றுவது தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

HIGHLIGHTS

குப்பை கொட்டும் பிரச்சினை தொடர்பாக அமைச்சர் முன்னிலையில் பேச்சுவார்த்தை
X

பிரச்சினைக்குரிய குப்பை கிடங்கு.

திருவண்ணாமலை அருகே புனல்காடு கிராமத்தில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று அண்ணா நுழைவு வாயில் பகுதியில் இருந்து ஊர்வலமாக செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, ஆட்சியர் முருகேஷுடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் சண்முகம் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி குப்பை கிடங்குக்கு சுமூக தீர்வு காண்பது என முடிவெடுக்கப்பட்டது.

இந்த நிலையில் அமைச்சர் எ.வ.வேலு, கலெக்டர் முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகளும் பொதுமக்கள் தரப்பை சேர்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சிவக்குமார் மற்றும் பொதுமக்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தைக்கு பிறகு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் பெ.சண்முகம் கூறும் போது,

புனல்காடு கிராமத்தில் குப்பை கிடங்கு அமைக்கப் படுவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து அமைச்சரிடம் கூறினோம். கிராம மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, மாற்று இடத்தை 10 நாட்களில் தேர்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். திருவண்ணாமலை சுற்றுப்புற பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களை பார்வையிட்டு தகுந்த இடத்தை அடை யாளம் காட்டுமாறு எங்களையும் கேட்டுக்கொண்டார்.

ஒருவேளை இடம் கிடைக்காத பட்சத்தில் பாதுகாப்பான முறையில் தேவையான அனைத்து உட்கட்டமைப்புகளுடன் பாதிப்பு இல்லாத வகையில் அங்கேயே குப்பை கிடங்கு அமைக்கப்படும் என்றும் இதுதொடர்பாக எங்களின் கருத்துகளும் பரிசீலிக்கப்படும் என்றும், அதுவரை 10 நாட்களுக்கு அந்த பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெறுவது நிறுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்படுகிறது என அவர்கள் கூறினர்.

Updated On: 31 May 2023 12:23 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இசையின் அசைவு நடனம்..!
  2. சினிமா
    இந்தியன் மட்டுமா? கமல்ஹாசன் வாங்கிய தேசிய விருதுகள்! என்னென்ன...
  3. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  4. வீடியோ
    🔴LIVE :ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் அனல்...
  5. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  6. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  7. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  8. திருவண்ணாமலை
    செய்யாற்றில் மனைவியை வேலைக்கு சேர்த்ததால் வியாபாரி மீது தாக்குதல்
  9. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு