/* */

31 மையங்கள் மூலம் நேரடி நெல்கொள்முதல் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

31 மையங்கள் மூலம் நேரடி நெல்கொள்முதல் 16-ந்தேதி முதல் தொடங்குகிறது. இதற்கான முன்பதிவு 15-ந்தேதி முதல் செய்யலாம் , கலெக்டர் தகவல்

HIGHLIGHTS

31 மையங்கள் மூலம் நேரடி நெல்கொள்முதல் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
X

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் புகைப்படம்

31 மையங்கள் மூலம் நேரடி நெல்கொள்முதல் 16-ந்தேதி முதல் தொடங்குகிறது. இதற்கான முன்பதிவு 15-ந்தேதி முதல் செய்யலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2022-23 காரீப் சம்பா பருவத்தில் 2-ம் கட்டமாக 9 தாலுகாக்களில் 31 மையங்கள் மூலம் நெல் கொள்முதல் 16-ந்தேதி (வியாழக்கிழமை) முதல் செய்யப்பட உள்ளது. இதற்கான இணையவழி முன்பதிவு 15-ந்தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. 2022-23-ம் ஆண்டிற்கு தமிழக அரசு சன்ன ரக நெல்லிற்கு குவிண்டால் ஒன்றிற்கு ரூ.100 உயர்த்தி ரூ.2 ஆயிரத்து 160-ம், இதர ரகங்களுக்கு ரூ.75 உயர்த்தி ரூ.2 ஆயிரத்து 115-ம் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை தாலுகாவில் நார்த்தாம்பூண்டி, போளூர் தாலுகாவில் எடப்பிறை, கீழ்பென்னாத்தூர் தாலுகாவில் காடகமான், , ஆரணி தாலுகாவில் அரியாப்பாடி, வெம்பாக்கம் தாலுகாவில் கீழ்நெல்லி, அரியூர், மாமண்டூர், தூசி, வெம்பாக்கம், வெங்களத்தூர், அழிவிடைதாங்கி, நாட்டேரி, தென்னம்பட்டு, பிரம்மதேசம், சுனைப்பட்டு, பெருங்காட்டூர், செய்யாறு தாலுகாவில் எச்சூர், வெங்கோடு, தவசி, ஆக்கூர், தேய்த்துறை, ஆலாத்தூர், பெருங்குளத்தூர், புளியரம்பாக்கம், மேல்சீசமங்கலம், மேல்மா, கடுகனூர், வந்தவாசி தாலுகாவில் நல்லூர், பொன்னூர், சேத்துப்பட்டு தாலுகாவில் நம்பேடு, தண்டராம்பட்டு தாலுகாவில் மேல்கரிப்பூர் ஆகிய இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்ய வரும் விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கல் சான்றினையும், உதவி வேளாண்மை அலுவலரிடம் மகசூல் சான்றினையும் அடங்கலில் பெற வேண்டும். பின்னர் விவசாயிகள் நேரடி கொள்முதல் மையத்திற்கு மேற்குறிப்பிட்ட சான்றுகள், ஆதார், சிட்டா மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றினை நேரில் கொண்டு சென்று இதற்கென நியமனம் செய்யப்பட்டுள்ள நேரடி கொள்முதல் மைய அலுவலரிடம் அளிக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் மைய அலுவலர் விவசாயிகள் அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் பதிவுகள் மேற்கொள்வார்.

பதிவுகள் மேற்கொண்ட பின்னர் சம்பந்தப்பட்ட விவசாயியின் பதிவு செய்த செல்போன் எண்ணிற்கு வெற்றிகரமாக பதிவேற்றம் செய்யப்பட்டது என்ற குறுஞ்செய்தி அனுப்பப்படும். பதிவு செய்த விண்ணப்பங்களின் விவரம் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலருக்கு அனுப்பப்பட்டு அவரால் பதிவு செய்துள்ள விவரங்கள் முழுமையாக சரிபார்க்கப்பட்டு தகுதியின் அடிப்படையில் ஒப்புதல், நிராகரிப்பு செய்யப்படும்.

ஒப்புதல் அளிக்கப்பட்ட விவசாயிகள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் மட்டுமே சம்பந்தப்பட்ட மையத்திற்கு சென்று நெல் அளிக்க வேண்டும். விவசாயிகள் முன்பதிவு செய்வதில் சந்தேகம், சான்றுகள் பெறுதல், நெல் கொள்முதல் செய்யும் போது தேவையற்ற கால தாமதம் அல்லது சிக்கல்கள் ஏதும் ஏற்பட்டால் உதவிக்கு 9487262555, 9445245932 (தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்), 9443911434 மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ) ஆகிய எண்களை தொடர்பு கொண்டோ அல்லது 'வாட்ஸ் அப்' வாயிலாக தெரிவித்தாலோ அவை உடனடியாக சரி செய்யப்படும். எனவே விவசாயிகள் மேற்குறிப்பிட்ட நடைமுறைகளை பின்பற்றி தங்களின் நெல்லை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வழங்கி பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் , வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 12 March 2023 1:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...