/* */

பௌவுர்ணமியையொட்டி விடிய விடிய கிரிவலம் சென்று பக்தர்கள் வழிபாடு

திருவண்ணாமலையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வழிபட்டனர்

HIGHLIGHTS

பௌவுர்ணமியையொட்டி  விடிய விடிய கிரிவலம்  சென்று பக்தர்கள் வழிபாடு
X

நல்லிரவு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலத்திற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வந்தது.

தற்போது கொரோனா பரவல் முற்றிலும் குறைந்ததையடுத்து அனைத்து கட்டுப்பாடுகளும் விலக்கிக்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில் இந்த மாதத்திற்கான பௌர்ணமியன்று பக்தர்கள் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. இந்த மாதத்திற்கான பௌர்ணமி நேற்று மதியம் 2.10 மணிக்கு தொடங்கி இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணிக்கு நிறைவடைகிறது.23 மாதங்களுக்கு பிறகு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று இரவு சுமார் 9 மணிக்கு மேலிருந்து பக்தர்களின் வருகை அதிகரிக்க தொடங்கியது.

இதனால் திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் ஈசான்ய மைதானம், அரசு கலைக்கல்லூரி அருகில் உள்ள நகராட்சி மைதானம், திருக்கோவிலூர் சாலையில் உள்ள மைதானம் உள்ளிட்ட இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு அங்கு பஸ்கள் நிறுத்தப்பட்டன.கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. கிரிவலப்பாதையில் ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு பக்தர்கள் கற்பூர தீபம், நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். இதனால் கோவில் முன்பு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 23 மாதங்களுக்கு பிறகு கிரிவலத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால் திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் பூண்டது போன்று காட்சி அளித்தது.

திருக்கல்யாண உற்சவம்: அருணாசலேஸ்வரர் கோயிலில் அதிகாலையிலேயே சுவாமி மற்றும் அம்பாள் மற்றும் உள்ள அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்றது.பின்னர் அதிகாலை மூலஸ்தானத்தில் மூலவருக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து வழிபட்டனர்.

Updated On: 18 March 2022 6:08 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக VanathiSrinivasan பேச்சு !...
  2. நீலகிரி
    ஊட்டியில் மலர் கண்காட்சி நாளை தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்
  3. வீடியோ
    Savukku Shankar மீது கஞ்சா வழக்கு திமுக அரசின் கையாலாகாத்தனம்...
  4. இந்தியா
    விமான நிறுவன ஊழியர்கள் 30 பேர் பணிநீக்கம்: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. நாமக்கல்
    எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மன் கோயில் தேர்த்திருவிழா: திரளான பக்தர்கள்...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. தேனி
    அரசு மருத்துவமனையின் அவலம்! இங்கில்ல… மத்திய பிரதேசத்தில்…!
  9. தேனி
    அம்பானி, அதானியிடம் இருந்து எவ்வளவு பணம் வாங்கினீர்கள்? பிரதமர்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்