Begin typing your search above and press return to search.
திருவண்ணாமலையில் மாவட்ட சுகாதாரப் பேரவை கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரப் பேரவை கூட்டம், பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, தலைமையில் நடைபெற்றது.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்ட சுகாதார பேரவை கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி தலைமையில் நடைபெற்றது. மேலும் மாவட்ட சுகாதாரப் பேரவை கூட்டத்தின்போது சுகாதாரத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி துவக்கி வைத்து பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை , செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.