/* */

சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும் வெளியான அறிவிப்பு

சென்னையிலிருந்து திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்ட ரயில் சேவை இன்று துவங்கியது.

HIGHLIGHTS

சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும் வெளியான அறிவிப்பு
X

அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷத்துடன் சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு கிளம்பிய ரயில்.

சென்னை கடற்கரை - வேலூர் கன்டோன்மென்ட் மெமு ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படு வழக்கமான ரயில் சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் இன்று மாலை 6 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்பட்டது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்த ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.அண்மைக்காலங்களாக ஆந்திராவில் இருந்து வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிக அளவில் அளவில் உயர்ந்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை நகருக்கான ரயில்வே போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் விதமாக திருவண்ணாமலை-சென்னை இடையே தினசரி இயக்கப்பட்ட பாசஞ்சர் ரயில் சேவையை, மீண்டும் இயக்க வேண்டும் என பக்தர்கள் அந்த பகுதி பொதுமக்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.

இதையடுத்து சென்னை பீச் ஸ்டேஷனில் இருந்து வேலூர் கண்ட்டோண்மென்ட் வரை தினசரி இயக்கப்படும் பாசஞ்சர் ரயிலை, தினமும் திருவண்ணாமலை வரை நீட்டித்து கடந்த வாரம் தெற்கு ரயில் திருச்சி கோட்டம் உத்தரவிட்டது.

இந்த ரயில் சேவை இன்று (2ம் தேதி) மாலை 6 மணிக்கு சென்னை பீச் ஸ்டேஷனிலும், திருவண்ணாமலையில் நாளை (3ம் தேதி) அதிகாலை 4 மணிக்கும் தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. இதனால் பொதுமக்கள் பக்தர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

இந்நிலையில், நிர்வாக காரணங்களால் அந்த ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் நேற்று மாலை அறிவித்திருக்கிறது.

புதிய அறிவிப்பு,

சென்னை கடற்கரையில் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷத்துடன் திருவண்ணாமலையை நோக்கி ரயில் புறப்பட்டது

திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படுவதாக இருந்த சென்னை கடற்கரை - வேலூர் ரயிலின் நீட்டிப்பு மறு அறிவிப்பு வரும் வரை தள்ளி வைக்கப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று மீண்டும் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.




இன்று முதல் திட்டமிட்டபடி இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் மாலை செய்தி வெளியிட்டது.

அதன்படி இன்று மாலை சென்னை கடற்கரையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் புறப்பட்டு வந்து கொண்டிருப்பதாக திருவண்ணாமலை ரயில்வே நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் திருவண்ணாமலை பொதுமக்கள் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நேற்று தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று மீண்டும் புதிய அறிவிப்பு குளறுபடி காரணம் குறித்து திருவண்ணாமலை ரயில் நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது தெரியவில்லை என்று கூறிவிட்டனர்.

எது எப்படியோ திருவண்ணாமலைக்கு சென்னையிலிருந்து ரயில் வந்து கொண்டிருக்கிறது என தெரிவித்திருப்பதே பக்தர்களுக்கும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 2 May 2024 2:09 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்
  2. லைஃப்ஸ்டைல்
    மணமக்களுக்கு அன்பு நிறைந்த இல்லற வாழ்க்கைக்கான வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை வானில் பறக்க காத்திருக்கும் ஜோடிகளுக்கு வாழ்த்துகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்
  7. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  8. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  9. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி