/* */

திருவண்ணாமலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி ஆய்வு

நீதிமன்ற ஆய்வு பணிக்காக வந்திருந்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நட்டார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி ஆய்வு
X

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நட்டார்

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மாவட்ட நீதிமன்ற ஆய்வு பணிக்காக திருவண்ணாமலை வந்திருந்தார். தலைமை நீதிபதி திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிபதிகள் உடன் கலந்துரையாடினார்.

பின்னர் நீதிபதிகளுக்கும், வக்கீல்களுக்கும் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி ஆலோசனைகளை வழங்கினார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் சம்பவங்களில், பாதிக்கப்படுபவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இந்த வழக்குகளில் வழக்கறிஞர்கள் மன சாட்சியுடன் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் நீதியை தேடி வருபவர்கள் பயன்பெறும் வகையில் 'லிப்ட்' வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் அலுவலகம் அமைத்துக் கொடுக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் மணல் கடத்தல் உட்பட கனிம வள கொள்ளை தொடர்பான வழக்குகள் அதிகளவு நிலுவையில் உள்ளதால், அவ்வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைத்துக் கொடுக்க வேண்டும்" உள்ளிட்ட பல கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர்கள் அளித்துள்ளனர்.

பின்னர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நட்டார். இந்நிகழ்வில் மாவட்ட நீதிபதி திருமகள், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 9 Aug 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ப்ளூடூத் மற்றும் வழிசெலுத்துதல் வசதியுடன் ஸ்டீல்பேர்ட் ஃபைட்டர்...
  2. லைஃப்ஸ்டைல்
    தைத்திருநாளும் தமிழர்களின் பாரம்பரியமும்
  3. சிங்காநல்லூர்
    அதிமுக ஆட்சியியின் குடிநீர் திட்டங்களை திமுக செயல்படுத்தவில்லை :...
  4. லைஃப்ஸ்டைல்
    உலகெங்கும் பக்ரீத் கொண்டாட்டங்களில் உள்ள சுவாரஸ்ய வேறுபாடுகள்
  5. காஞ்சிபுரம்
    திருமண மண்டபங்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  6. கோவை மாநகர்
    தடுப்பணைகளை கட்டி தமிழகத்தை வஞ்சிக்கும் அண்டை மாநிலங்கள்: இபிஎஸ்...
  7. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்வரத்து 762 கன அடி
  8. வாகனம்
    வரே வா...வரப்போகுது ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450..! எக்கச்சக்க...
  9. இந்தியா
    மம்தா பானர்ஜிக்கு பாரத் சேவாஷ்ரம் சங்க துறவி நோட்டீஸ்
  10. டாக்டர் சார்
    அமைதியான எதிரி..! அமைதியான மாரடைப்பு..! உஷாரா இருக்கணும்ங்க..!