/* */

தமிழகத்தில் காலூன்ற பாஜக, ஆர்எஸ்எஸ் சூழ்ச்சி: பிரகாஷ் காரத்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்காலில் நடைபெற்றது.

HIGHLIGHTS

தமிழகத்தில் காலூன்ற பாஜக, ஆர்எஸ்எஸ் சூழ்ச்சி: பிரகாஷ் காரத்
X

பிரகாஷ் காரத்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுக் கூட்டம் திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்காலில் நடைபெற்றது. மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

இதில் பங்கேற்று பேசிய அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்கரத், தமிழகத்தில், பாஜகவும், ஆர்எஸ்எஸ்சும் காலூன்ற அனைத்து வித சூழ்ச்சிகளையும் செய்கிறது. அதற்காக, தி.மு.க. அரசை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதற்காக, ஆளுநரை பயன்படுத்துவது, மத்திய அரசின் விசாரணை அமைப்புகளை பயன்படுத்துவது என பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. தமிழக மக்களிடம் சூழ்ச்சிகளை உருவாக்கி வலுபெறலாம் என நினைக்கிறது. மதவெறி கருத்துக்களை கிராமப்புற மக்களிடம் விதைக்கிறார்கள். மனுஸ்ருதியை, இந்தியை, சமஸ்கிருதத்தை நாடு முழுவதும் திணிக்க தீவிரமாக பாஜக முயற்சிக்கிறது. அதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தமிழ்நாடு கடுமையாக எதிர்க்கிறது.

2024-ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி இணைந்து மகத்தான வெற்றி பெறுவதற்கான பணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொடங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் 4 பாஜக எம்எல்ஏக்கள் வருவதற்கு அதிமுக காரணமாக இருந்தது. எனவே, பாஜவுடன் இணைந்த கூட்டணி கட்சிகளையும் முறியடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறும்போது

மின்சார சட்ட திருத்த மசோதா மூலம் தமிழக மக்களின் உரிமை பறிக்கப்படும். மின்சார வாரியத்தை தனியாரிடம் ஒப்படைத்து, விருப்பப்படி கட்டணத்தை உயர்த்தும் நிலை உருவாகும். விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்துக்கு ஆபத்து ஏற்படும்.

அரசியல் அமைப்பு சட்ட வரம்புகளை மீறி, ஆர்எஸ்எஸ் அமைப்பின் அடிப்படையான கொள்கைகளை பற்றி ஆளுநர் ரவி பேசுகிறார். தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்காமல், மாநில அரசை எதிர்த்து பகிரங்கமாக கருத்து தெரிவித்து போட்டி அரசியல் நடத்தும் நிலை உருவாகி உள்ளது. தாங்கள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர் மூலம் போட்டி அரசியலை பாஜக நடத்துகிறது. ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி கொள்கையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில சுயாட்சி, இந்தி திணிப்பு, ஆளுநர் தலையீடு, மின்சார சட்ட திருத்த மசோதாவை கண்டித்து தமிழகத்தில் 4 மையங்களல் பெருந்திரள் போராட்டம் நடத்தப்படும்.

மழை காலங்களில் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க ஏரிகள், பாசன வடிகால்வாய்களை தூர்வாரி மழை நீர் வழிந்தோடும் வகையில் மாநில அரசு சிறப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்பெண்ணையாறு - பாலாறு இணைப்பு திட்டத்துக்கு ரூ.270 கோடி நிதி ஒதுக்கியும் நிறைவேற்றப்படவில்லை. நந்தன் கால்வாய் திட்டமும் முழுமை பெறாமல் உள்ளன.

தமிழக அரசு செய்து வரும் நல்ல செயல்கள் மறைந்து மின்சார கட்டணம் மற்றும் பால் விலை உயர்வு என்பது மக்களிடம் முகசுளிப்பை ஏற்படுத்துகிறது. இது தொடர்பாக முதல்வரை சந்தித்து, மக்கள் மீது சுமையை ஏற்றுவதை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்துவோம். என்றார். அப்போது அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Updated On: 20 Nov 2022 5:42 AM GMT

Related News

Latest News

  1. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  2. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  3. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  5. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  6. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  7. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  8. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  9. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...
  10. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...