/* */

திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையம் அமைக்க பூமி பூஜை

திருவண்ணாமலையில் ரூ.30 கோடியே 15 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையம் அமைக்க பூமி பூஜை
X

புதிய பஸ் நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை போடும் நிகழ்ச்சி

திருவண்ணாமலை நகரம் ஆன்மிக நகரம் மட்டுமின்றி சுற்றலா நகரமாகவும் உள்ளது. திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில், கிரிவலப்பாதையில் உள்ள கோவில்கள், ஆசிரமங்களை காண வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர்.

இதனால் நாளுக்கு நாள் திருவண்ணாமலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகின்றது. மேலும் திருவண்ணாமலை நகரின் மையப் பகுதியில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வரும் பேருந்துகளால் இடையூறுகளால் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படுகிறது.

இதனால் திருவண்ணாமலை புதியதாக பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து புதிய பேருந்துநிலையம் அமைத்திட திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் கடந்த பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள வேளாண்மைத் துறையின் கீழ் உள்ள டான்காப் நிறுவனத்திற்கு சொந்தமான 6.83 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதல்மைச்சர் ஸ்டாலின் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு முன்னிலையில் அடிக்கல் நாட்டினார். பின்னர் அந்த இடம் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு அங்கிருந்த பழைய கட்டிடங்கள் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது.

திருவண்ணாமலை நகராட்சி , எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் இணைந்து ஒரு கூட்டு நிறுவன முறையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்ட நிலையில் அந்த இடத்தில் ரூ.30 கோடியே 15 லட்சம் மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நகர மன்றத் தலைவர் நிர்மலா வேல்மாறன் தலைமையில் நடைபெற்றது.

இதில் திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே. கம்பன், நகராட்சி ஆணையர் முருகேசன், நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், நகர மன்ற துணைத் தலைவர் ராஜாங்கம், நகர மன்ற உறுப்பினர்கள் கணேசன், சீனிவாசன் ,மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜய ரங்கன், ஒப்பந்த காரர்கள், அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இது குறித்து நகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கையில்

பல வசதிகளை கொண்ட பிரம்மாண்டமாக கட்டப்படும் இந்த புதிய பேருந்து நிலையத்தில் தரைத்தளம், முதல் தளம், ஹெட் ரூம், பேருந்து நடைமேடை, உணவு விடுதிகள் என பிரம்மாண்டமாக அமைகின்றது.

மேலும் ஒரே நேரத்தில் 50 பேருந்துகள் நிற்கும் வசதியும், 62 கடைகளும், 60 கார்கள் நிறுத்த இட வசதியும், 250 இருசக்கர வாகனங்கள் மற்றும் 150 சைக்கிள் நிறுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 10 ஏக்கரில் தற்போது ஆறு ஏக்கர் அளவில் கட்டடங்கள் கட்டப்படுகிறது என தெரிவித்தனர்.

Updated On: 11 April 2023 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  2. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  3. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  4. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  6. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  7. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  8. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  9. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  10. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!