/* */

மகா தீப தரிசனம் நிறைவு

மகா தீப தரிசனம் நிறைவு பெற்றதையடுத்து , கார்த்திகை தீப கொப்பரை மலை உச்சியில் இருந்து இறக்கப்பட்டது

HIGHLIGHTS

மகா தீப தரிசனம் நிறைவு
X

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் கடந்த 19-ந் தேதி கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி மகா தீபம் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து 11 நாட்கள் மலை உச்சியில் மகா தீபம் காட்சி அளிக்கும். அதன்படி, கடந்த 19-ந் தேதி முதல் நேற்று வரை மகா தீபம் காட்சியளித்தது. 11-வது நாளான நேற்றுடன் மகா தீபம் தரிசனம் நிறைவு பெற்றது. பக்தர்கள் அனைவரும் கடைசி நாளான நேற்று மகா தீபத்தை கண்டு தரிசித்தனர்.

இந்நிலையில், இன்று மலை உச்சியில் இருந்து மகா தீப கொப்பரை இறக்கப்பட்டது. பின்னர், மகா தீப கொப்பரை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் மகா தீப கொப்பரை வைக்கப்படவுள்ளது.

ஏராளமான பக்தர்கள் அந்த தீப கொப்பரை வணங்கி வருகின்றனர்.

Updated On: 30 Nov 2021 1:54 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதல் நாடகத்தின் அரங்கேற்ற நாள், திருமணம்..! வாங்க வாழ்த்தலாம்..!
  2. வீடியோ
    நாங்க நசுக்கவும் இல்ல பிதுக்கவும் இல்ல | Pa.Ranjith-க்கு பதிலடி...
  3. வீடியோ
    SavukkuShankar கைது சரியா ? நச்சுனு பதில் சொன்ன மக்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    குழந்தைக்கு ஊட்டம்! சரியான உணவுத் திட்டம்!
  5. இந்தியா
    மும்பையில் கனமழை! முடங்கிய மெட்ரோ போக்குவரத்து..!
  6. வீடியோ
    🔴LIVE : ஜம்மு காஷ்மீர் விவகாரம் | வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்...
  7. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  8. இந்தியா
    மும்பையில் திடீர் கனமழை..! வெப்பத்துக்கு ஓய்வு..!
  9. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள்: ஈரோட்டில் தங்கத் தேர் இழுத்த...
  10. லைஃப்ஸ்டைல்
    வட துருவ ஒளியின் மாயாஜாலம்!