/* */

பௌர்ணமி கிரிவலம் செல்கிறீர்களா ? உகந்த நேரத்தை தெரிந்து கொள்ளுங்கள்

திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் குறித்து கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

பௌர்ணமி கிரிவலம் செல்கிறீர்களா ? உகந்த நேரத்தை தெரிந்து கொள்ளுங்கள்
X

அண்ணாமலையார் கோயில் , கிரிவலம் வரும் பக்தர்கள் கோப்பு படம்.

மலையே மகேசன்" என போற்றப்படும் திருவண்ணாமலையில் பௌர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபடுகின்றனர்.

நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பின்புறமுள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலையையே சிவனாக எண்ணி பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபடுவார்கள்.

திருவண்ணாமலை கோயில். சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாக காட்சித்தரும் தலமாகவும் திகழ்கிறது. 14 கிலோ மீட்டர் சுற்றுப் பாதையை கொண்ட மலையை பௌர்ணமி நாட்களில் கிரிவலம் வந்து பக்தர்கள் வழிபடுவது வழக்கம். தமிழகம் மட்டுமன்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் கிரிவலம் வந்து செல்வர்.

இதில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும் நாளிலும், சித்ரா பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

இந்த நிலையில் ஆடி மாதத்திற்கான பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

பௌர்ணமி வருகிற 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3.25 மணிக்கு தொடங்கி மறுநாள் 2-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலை 1.05 மணிக்கு நிறைவடைகின்றது. இதனால் செவ்வாய்க்கிழமை இரவு கிரிவலம் செல்ல உகந்தது என்று கோவில் நிர்வாகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் பௌர்ணமியை முன்னிட்டு கோவிலில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் 2 நாட்கள் அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பௌர்ணமி முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் கலெக்டர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசுகையில்

ஏற்கனவே பௌர்ணமி அன்று வருகை தந்த பக்தர்களை விட இந்த பௌர்ணமிக்கு பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள் என எதிர்பார்கப்படுகிறது. எனவே இந்த முறை முதல்நிலை அலுவலர்களுக்கு ஒதுக்கபடும் பணிகளை தோய்வின்றி சிறப்பான முறையில் மேற்கொள்ள வேண்டும். பௌர்ணமி தினத்தன்று 01.08.2023 (செவ்வாய் கிழமை) காலை 5 மணிக்கு நடை திறக்ப்பட்டு இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படும்.

பௌர்ணமி தினத்தன்று சாமி தரிசனம் செய்ய வரும் அனைத்து பக்தர்களுக்கு இலவசமாக தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்தின் மூலம் குடிநீர் வசதி, கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் மற்றும் குப்பைகளை அகற்றுதல், நகரத்தை தூய்மையாக வைத்திருக்க அதிகமான தூய்மை பணியாளர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

வருவாய் துறை மற்றும் நெடுஞ்சாலை துறை மூலமாக ஆக்கிரமிப்பு கடைகள் அமைப்பவர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலமாக தடையில்லாத மின்சாரம் வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவு பாதுகாப்பு துறை மூலமாக அன்னதானம் வழங்க ஆன்லைன் மூலமாக பதிவு செய்தவர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்க வேண்டும்.

மேலும், ஊரக வளர்ச்சி துறை மூலமாக காவல் துறை பாதுகாப்பு பணி மேற்கொள்ள உயர்மட்ட கோபுரம் அமைத்து தா வேண்டும், காவல்துறை மூலம் 14 கி.மீ. கிரிவலப்பாதையை சுற்றி சாலையின் முக்கிய பகுதிகள் மற்றும் அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் வளாகத்தை சுற்றி உள்ள அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட வேண்டும்” என்றார்.

Updated On: 30 July 2023 1:02 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  6. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  7. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...
  8. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்
  9. ஆன்மீகம்
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 203 கன அடி