பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 203 கன அடி

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 203 கன அடி
X

பவானிசாகர் அணை.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வெள்ளிக்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 203 கன அடியாக உள்ளது.

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வெள்ளிக்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 203 கன அடியாக உள்ளது.

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். இந்த அணையின் மூலம் தடப்பள்ளி, அரக்கன்கோட்டை, காலிங்கராயன், கீழ்பவானி வாய்க்கால்கள் வழியாக சுமார் 2.50 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக கோடை மழை பெய்ததால் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று (மே.16) வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 232 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று (மே.17) வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி 203 கன அடியாக சற்று குறைந்துள்ளது.

அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீரும், பவானி ஆற்றில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 200 கன அடி நீரும் என மொத்தம் வினாடிக்கு 205 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் நேற்று காலை 44.38 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 44.38 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் நீர் இருப்பு 3.22 டிஎம்சியாகவும் உள்ளது. மேலும், அணைப் பகுதியில் 1.0 மி.மீ மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.

Tags

Next Story
எப்டியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க!..டிங்கா டிங்கானு ஒரு நோயாமா..பேரு தாங்க அப்டி,ஆனா பயங்கரமான நோய்!..