/* */

திருவண்ணாமலை மாவட்ட உள்ளாட்சி இடைத்தேர்தலில் 31 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு

திருவண்ணாமலை மாவட்ட உள்ளாட்சி இடைத்தேர்தலில், 5 ஊராட்சி மன்ற தலைவர்கள் 26 ஊராட்சி உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்ட உள்ளாட்சி இடைத்தேர்தலில் 31 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு
X

திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள 35 உள்ளாட்சி பதவிகளில் 87 பேர் போட்டியிடுகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 3 ஒன்றியக் குழு உறுப்பினர் பதவி, 11 ஊராட்சி மன்ற தலைவர் பதவி மற்றும் 52 வார்டு உறுப்பினர் பதவி என 66 பதவிகளுக்கு வரும் அக்டோபர் 9-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளன.

3 ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு திமுக, அதிமுக வேட்பாளர்கள் உட்பட 21 பேரும், 11 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 36 பேரும், 52 வார்டு உறுப்பினர் பதவிக்கு 117 பேரும் என மொத்தம் 174 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையில் ஒன்றியக் குழு உறுப்பினர் பதவி மற்றும் ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் தலா ஒரு மனுவும், வார்டு உறுப்பினர் பதவிக்கு தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் 2 மனுவும் என மொத்தம் 4 வேட்பு மனுக்கள் தாக்கல் நிராகரிக்கப்பட்டது. 170 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது.

ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த 8 பேரும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த 14 பேரும், வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்த 30 பேரும் என மொத்தம் 52 பேர், தங்களது வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுக் கொண்டனர். இதையடுத்து 118 வேட்பு மனுக்களை, மாநில தேர்தல் ஆணையம் இறுதி செய்து வெளியிட்டுள்ளது .

இதையடுத்து செய்யாறு ஒன்றியம் 10-வது வார்டு, பெரணமல்லூர் ஒன்றியம் 12-வது வார்டு, புதுப்பாளையம் ஒன்றியம் 11-வது வார்டு என 3 ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த 3 பதவிகளுக்கு 12 பேர் போட்டியிடுகின்றனர்.

அதேநேரத்தில் 11 ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளில் துரிஞ்சாபுரம் ஒன்றியம் கோவூர், பெரியகிளாம்பாடி, சானானந்தல், கலசப்பாக்கம் ஒன்றியம் சேங்கபுத்தேரி மற்றும் வெம்பாக்கம் ஒன்றியம் இருமரம் ஆகிய 5 ஊராட்சி மன்ற தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மேலும் அனக்காவூர் ஒன்றியம் கோட்டகரம், ஆரணி ஒன்றியம் அக்கராபாளையம், செங்கம் ஒன்றியம் இளங்குன்னி, கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் அரும்பாக்கம், வேளானந்தல், போளூர் ஒன்றியம் பொத்தேரி ஆகிய 6 ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த 6 பதவிகளுக்கு 16 பேர் போட்டியிடுகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 3 ஒன்றியக் குழு உறுப்பினர் பதவி, 6 ஊராட்சி மன்ற தலைவர் பதவி மற்றும் 26 வார்டு உறுப்பினர் பதவி என மொத்தம் 35 பதவிகளுக்கு 87 பேர் போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவு அக்டோபர் 9-ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12-ம் தேதி நடைபெறும்.

Updated On: 27 Sep 2021 1:07 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...