/* */

திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோவிலில் இன்று கருட சேவை

திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோவில் தை பிரம்மோற்சவ விழாவில் இன்று கருட சேவை நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவள்ளூர் வைத்திய வீரராகவ  பெருமாள் கோவிலில் இன்று கருட சேவை
X

கருட வாகனத்தில் வீதி உலா வந்தார் திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள்.

திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவிலில்,தை பிரம்மோற்சவ விழாவையொட்டி கருட சேவை இன்று நடைபெற்றது.

108 திவ்ய தேசங்களில் ஒன்றாக உள்ளது திருவள்ளூர் ஸ்ரீவைத்திய வீரராகவப் பெருமாள் கோவில். இங்கு தை பிரம்மோற்சவ விழா மற்றும் சித்திரை பிரம்மோற்சவ விழா என ஆண்டுக்கு இரு முறை பிரமோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் தை பிரம்மோற்சவ விழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தை அமாவாசை அன்று சாலிஹோத்ர மகரிஷிக்கு வீரராகவப் பெருமாள் காட்சி அளித்த தினம் என்பதால் தை பிரம்மோற்வம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த நாளில் பெருமாளை தரிசித்தால் புண்ணியம் என பக்தர்கள் கருதுகிறார்கள்

தை பிரம்மோற்ச உற்சவத்தின் 3-ம் நாளான இன்று காலை உற்சவர் வீரராகவப் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளினார். ஐந்து மணிக்கு கோபுர தரிசனமும் 7 மணிக்கு திருவீதி உலாவும் நடைபெற்றது.இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பல்வேறு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து 5வது நாள் 21-ம் தேதி (சனிக்கிழமை) தை அமாவாசையை முன்னிட்டு ரத்னாங்கி சேவையில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.பிரம்மோற்சவத்தின் 7ம் நாளான 23-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை திருத்தோ் திருவிழாவும், 10-ஆவது நாளான 26-ஆம் தேதி வெட்டிவோ் சப்பரத்தில் இரவு 8 மணிக்கு பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விழா ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் மற்றும் விழாக்குவினர் செய்து உள்ளனர்.

Updated On: 20 Jan 2023 6:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு