/* */

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் உலக புத்தக தின விழா

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உலக புத்தக தின விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் உலக புத்தக தின விழா
X

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உலக புத்தக தின விழா நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர். கா. பிச்சுமணி தலைமை தாங்கினார். பல்கலைக்கழக நூலகத் துறைத்தலைவர் முனைவர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார். உலகப் புத்தக தின சிறப்புரையை தூய யோவான் கல்லூரி முதல்வர். முனைவர் எஸ். ஜான் கென்னடி வழங்கினார். பல்கலைக்கழக நூலக துறை தலைவர் முனைவர்.ப. பாலசுப்பிரமணியன் எழுதிய ' உலகை ஆளும் தமிழர்கள்', என்ற நூலை துணைவேந்தர் முனைவர் கா பிச்சுமணி வெளியிட மாவட்ட மைய நூலக வாசகர் வட்ட தலைவர் அ.மரியசூசை பெற்றுக்கொண்டார்.

உலகை ஆளும் தமிழர்கள் நூல் விமர்சனத்தை சங்கர் மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியர் முனைவர் கோ. கணபதி சுப்பிரமணியன் உரையாற்றினார். தொடர்ந்து தமிழக அரசின் சிறந்த வாசகர் வட்ட விருது பெற்ற திருநெல்வேலி மாவட்ட மைய நூலக வாசகர் வட்ட நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

மாவட்ட நூலக அலுவலர் லெ.மீனாட்சிசுந்தரம், பெருங்கொடையாளர் முத்து கிருஷ்ணன், சதக் கத்துல்லாஅப்பா கல்லூரி நூலகர் சரவணகுமார், தேசிய வாசிப்பு இயக்கப் பொருளாளர் அ.பாலாஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக பல்கலைக்கழக நூலகர் முனைவர் ஆ.திருமகள் நன்றி கூறினார்.


விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் கா. பிச்சுமணி பேசியதாவது:-

கலைமகள் ஏடு வைத்திருக்கிறாள் திருவள்ளுவர் ஏடுவைத்திருக்கிறார்கள் இவர்கள் இருவரும் கற்றுக் கொண்டே இருக்கிறார்கள். படித்துக்கொண்டே இருக்கிறார்கள் நாமும் வாசிப்பை சுவாசிப்பு போல் கைக் கொள்ள வேண்டும் ஆனால் இன்றைய இளைஞர்கள் தொலைக்காட்சி, ஊடகம் இணையம் என்று சதா சர்வ காலமும் பொழுதை முழுதும் கழித்துக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் புத்தகம் வாசிக்கும் போதுதான் ஐம்புலன்களும் ஒருங்கிணைந்து இன்பம் அடைகின்றது. மூளை வளர்ச்சி அடைகின்றது. புத்தகம் வாசித்த பிறகு அதனுடைய கருத்தை அசைபோட முடியும், உடற்பயிற்சி உடலுக்கு நன்மை தரும், ஆனால் வாசிப்பு மூளைக்கும் உள்ளத்திற்கும் முக்கியமானது. இணையத்தில் பல்வேறு தகவல்கள் இருக்கும் வேக வேகமாக பார்க்க வேண்டும். ஆனால் புத்தகத்தில் ஒரு தனிப்பட்ட செய்தி விபரமாக முழுமையாக கிடைக்கும். புத்தகம் வாசிக்கும் போது பரந்த எண்ணமும் விரிந்த அறிவுத்திறனும் ஏற்படும் .இன்று புத்தகம் வாசிக்கும் பழக்கம் இன்று கூடிக் கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக குழந்தைகள் மாணவர்கள் இளைஞர்கள் அதிகமாக புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை கை கொள்ள வேண்டும். அதற்கு பெற்றோர்களும் ஆசிரியர்களும் துணையாக இருக்க வேண்டும். என்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் கா.பிச்சுமணி வேண்டுகோள் விடுத்தார்.

Updated On: 24 April 2021 4:10 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்