/* */

நெல்லையில் களைகட்டும் தீபாவளி விற்பனை: ஜவுளி கடைகளில் குவிந்த கூட்டம்

கொரோனா தளர்வுகளை தொடர்ந்து இந்த ஆண்டு தீபாவளி கொண்டாடுவதற்கு மக்கள் தயாராகி வருகின்றனர்.

HIGHLIGHTS

நெல்லையில் களைகட்டும் தீபாவளி விற்பனை: ஜவுளி கடைகளில் குவிந்த கூட்டம்
X

வண்ணாரப்பேட்டையில் உள்ள ஜவுளி நிறுவனங்களில் புத்தாடைகள் வாங்க மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.

நெல்லையில் தீபாவளி பண்டிகை களை கட்டத் தொடங்கிவிட்டது. தீபாவளி பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியன்று மக்கள் புத்தாடை அணிந்தும், பலவகையான இனிப்புகளை படைத்தும் பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடுவார்கள்.

ஆண்டு முழுவதும் உழைத்தாலும் தீபாவளியன்று குடும்பத்துடன் கொண்டாடுவார்கள். நாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தீபாவளி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படவில்லை. ஆனால் கொரோனா தொற்று குறைவடைந்ததால் இந்த ஆண்டு தீபாவளி அதிவிமரிசையாக கொண்டாட மக்கள் முடிவு செய்துள்ளனர்.

தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம் இருப்பதால் நெல்லையில் தீபாவளி களை கட்டத் தொடங்கி விட்டது. நெல்லை டவுண் வடக்கு ரத வீதியில் ஜவுளி கடைகள் அதிகமாக உள்ளதால் மக்கள் புத்தாடைகள் எடுக்க கூட்டம் கூட்டமாக வந்தனர். இதே போன்று வண்ணாரப்பேட்டை, பைப்பாஸ் சாலையில் ஜவுளி நிறுவனங்களில் புத்தாடைகள் வாங்க மக்கள் கூட்டமாக வந்தனர். மக்கள் கொரோனா விதி முறைகளைப் பின்பற்றி முகக்கவசம் அணிந்து வந்தனர்.

Updated On: 25 Oct 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  4. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  5. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  6. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  8. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  9. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  10. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...