/* */

நெல்லை:மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் கிடந்த இளைஞரை மீட்ட தன்னார்வலர்கள்

மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் கிடந்த இளைஞரை மீட்டு மாநகராட்சி ஆதரவற்றோர் சிறப்பு முகாமில் தங்க வைத்து உணவு அளித்து வரும் தன்னார்வலர்கள்.

HIGHLIGHTS

நெல்லை:மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் கிடந்த இளைஞரை மீட்ட தன்னார்வலர்கள்
X

சாலையில் கேட்பாரற்று கிடந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரை மீட்ட தன்னார்வலர்கள்.

நெல்லை மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் அலுவலகம் செல்லும் போது, சாலையோரம் கிடந்த இளைஞரை பார்த்துள்ளார். உடனடியாக, மாநகராட்சி ஆதரவற்றோர் சிறப்பு தற்காலிக முகாமிற்கு போன் செய்து இளைஞருக்கு உதவிட கேட்டுக் கொண்டார். அதன்பேரில், சோயா மாரிமுத்து தலைமையில்( R-SOYA )சோயாவின் தன்னார்வலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று இளைஞரை தூக்கி கொண்டு அருகில் இருந்த மாநகராட்சி கட்டண கழிப்பறையில் குளிக்க வைத்து சுத்தம் செய்த பின் புதிய ஆடை மாற்றி பின் கல்லணை பள்ளியில் உள்ள மாநகராட்சி ஆதரவற்றோர் சிறப்பு தற்காலிக முகாமிற்கு அழைத்து சென்று முடி திருத்தி, உணவு சாப்பிட வைத்தனர்.

தொடர்ந்து அவரிடம் பேசியதில் பெயர் சாமுவேல், சொந்த ஊர் திசையன்விளை அருகே இடச்சவிளை, தந்தை பெயர் நல்லதம்பி என்றும் இவரின் குடும்பம் நல்ல வசதியான நிலையில் இருந்து பின் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டதும், தாய், தந்தை இறந்து விட்டதாகவும் வேறு உறவு யாரும் இல்லை என்றும் தெரியவந்தது. தொடர்ந்து மாநகராட்சி ஆதரவற்றோர் சிறப்பு முகாம் அவருக்கு பாதுகாப்பு அளித்து வருகிறது.

Updated On: 23 July 2021 5:55 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  2. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  3. ஈரோடு
    சத்தி, புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள்:...
  4. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  5. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...
  6. இந்தியா
    நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய 7 வழி...
  7. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  8. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...
  9. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  10. ஈரோடு
    ஆபத்தை உணராமல் காட்டாற்று வெள்ளத்தை கடந்த கடம்பூர் மலைக்கிராம...