/* */

திருநெல்வேலி மாவட்ட அதிமுக உட்கட்சி தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம்

திருநெல்வேலி மாவட்ட அதிமுக உட்கட்சி தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் தச்சை-கணேசராஜா தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருநெல்வேலி மாவட்ட அதிமுக உட்கட்சி தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டம்
X

திருநெல்வேலி மாவட்ட கழகச் செயலாளர் தச்சை‌ என்.கணேசராஜா தலைமையில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டம்.

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானில் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள், பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு கழக நிர்வாகிகள், நகரங்களுக்கு உட்பட்ட வார்டு கழக நிர்வாகிகள், மற்றும் மாநகராட்சிப் பகுதிகள் உட்பட்ட வட்டக் கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான முதற்கட்ட தேர்தல் இன்றும் நாளையும் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று (12ம் தேதி) நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட கழகச் செயலாளர் தச்சை‌ என்.கணேசராஜா தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் கழக அமைப்புச் செயலாளர் ஜக்கையன், தேனி மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் கழக நாடாளுமன்ற மக்களவை தலைவர் ரவீந்திரநாத், தேனி மாவட்ட கழக செயலாளர் சையது கான் கலந்துகொண்டனர்.

பின்னர் கழக அமைப்பு தேர்தலை நடத்துவதற்கான வாக்காளர் பட்டியல், மினிட் புத்தகம், விண்ணப்ப படிவம், ரசீது புத்தகம், வெற்றி படிவம் முதலானவற்றை சம்பந்தப்பட்ட மாவட்ட கழக செயலாளரிடம் பெற்று அவற்றை ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்கான தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களிடம் வழங்கினர்.

கழக சட்டத்திட்டத்தின் படி தேர்தல்களை முறையாக நடைபெற வேண்டும் என ஆலோசனை வழங்கினர். இதில் கழக முன்னணி நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் தொண்டர்கள் பங்கேற்றனர்.

Updated On: 13 Dec 2021 3:26 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  2. இந்தியா
    மோடி அரசில் 33 புதுமுகங்கள்; பிரபல அரசியல் குடும்பங்களில் இருந்து ஆறு
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. பொன்னேரி
    கற்கை நன்றே அறக்கட்டளை சார்பில் மாணவிகளுக்கு மிதிவண்டிகள்..!
  6. நாமக்கல்
    கால்நடை மருத்துவர் பட்டப்படிப்பிற்கு ஜூலை 2வது வாரம் கவுன்சலிங்...
  7. நாமக்கல்
    முட்டை விலை மேலும் 10 பைசா உயர்வு ஒரு முட்டை ரூ. 4.80
  8. பூந்தமல்லி
    ஸ்ரீ கங்கையம்மன் கோவிலின் முதலாம் ஆண்டு தீமிதி திருவிழா!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை...
  10. திருவள்ளூர்
    ஸ்ரீமதுரை வீரன், ஸ்ரீமுனீஸ்வரர், ஸ்ரீதேவி நாகாத்தம்மன் கோவிலின் 11-ம்...