/* */

ஸ்மார்ட்சிட்டி திட்டம் சிறப்பாக செயல்படுத்தியமைக்காக நெல்லை மாநகராட்சிக்கு விருது

சீர்மிகு நகரத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்கு திருநெல்வேலி மாநகராட்சிக்கு விருது வழங்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

ஸ்மார்ட்சிட்டி திட்டம் சிறப்பாக செயல்படுத்தியமைக்காக நெல்லை மாநகராட்சிக்கு விருது
X

ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக நெல்லை மாநகராட்சி ஆணையருக்கு விருது வழங்கப்பட்டது.

சீர்மிகு நகரத் திட்டம் (Smart City) 25.06.2015 அன்று மத்திய அரசால் துவக்கப்பட்ட இத்திட்டமானது திருநெல்வேலி மாநகராட்சியில் 22.12.2017 அன்று தான் சீர்மிகு நகரமாக தேர்வு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டது.

அதன்படி இச்சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் மொத்த மதிப்பீடு தொகை ரூ.965 கோடியாகும்.

தற்போது இத்திட்டத்தின் கீழ் பேட்டை - பழைய பேட்டை இணைப்புச் சாலையில் சரக்கு வாகன முனையம் அமைத்தல், பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் அபிவிருத்திப் பணிகள், அறிவியல் பூங்கா அமைத்தல், பாளையங்கோட்டை பேரூந்து நிலையம் மேம்படுத்தும் பணிகள், மின்கலம் மூலம் இயங்கும் வாகனங்கள் கொள்முதல் செய்தல் உள்ளிட்ட 32 திட்டப்பணிகள் ரூ.319.02 கோடி மதிப்பீட்டில் நிறைவடைந்துள்ளது.

மேலும், சந்திப்பு பேருந்து நிலைய அபிவிருத்திப் பணிகள், வணிக மையம் மேம்படுத்தும் பணிகள், போஸ் தினசரி சந்தை மேம்படுத்தும் பணிகள், பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகில் வணிக மையம் கட்டும் பணிகள், நேரு சிறுவர் கலையரங்கம் மேம்படுத்தும் பணிகள் உள்ளிட்ட 52 எண்ணம் திட்டப்பணிகள் ரூ.642.98 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.

சீர்மிகு நகரத் திட்டப்பணிகள் சிறப்பாக திருநெல்வேலி மாநகராட்சி செயல்படுத்தப்பட்டமைக்கு மூன்றாவது சுற்றில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாநகராட்சி முதல் இடத்திலும், இந்திய அளவில் மூன்றாவது இடமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டப்பணிகள் தொடர்பாக மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார துறை அமைச்சரகத்தால் சூரத்தில் (India Smart Cities Awards Contest) 2020 விருது வழங்கும் விழா 18.04.2022 முதல் 20.04.2022 ஆகிய நாட்களில் நடை பெற்றது.

இவ்விழாவில் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் மற்றும் சீர்மிகு நகர நிர்வாக இயக்குநர் ப.விஷ்ணுசந்திரன் கலந்து கொண்டு திருநெல்வேலி மாநகராட்சிக்கான விருதினை பெற்றுக் கொண்டார்.

Updated On: 22 April 2022 8:54 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  6. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்