/* */

நெல்லை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் தீ விபத்து

ராமையன்பட்டியிலுள்ள மாநகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயால் வாகன ஓட்டிகள் பொது மக்கள் புகை மண்டலத்தால் சிரமப்பட்டனர்

HIGHLIGHTS

நெல்லை மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் தீ விபத்து
X

நெல்லை மாநகராட்சிக்கு சொந்தமான ராமையன்பட்டி குப்பை கிடங்கில் தீ விபத்து. 

நெல்லை மாநகராட்சிக்கு சொந்தமான ராமையன்பட்டி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த நான்கு தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த வாகனங்கள் மூலம் அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீ கொழுந்து விட்டு எரிவதினால் நெல்லை- சங்கரன்கோவில் சாலையில் ராமாயன்பட்டி பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. புகையின் தாக்கம் ராமையன்பட்டி பகுதியில் 15 முதல் 25 நாட்கள் குடியிருப்பு பகுதியில் இருக்கும் என்றும் அதனால் பலரும் ஊரை காலி செய்ய வேண்டிய நிலைமையில் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.நெல்லை மாநகராட்சிக்கு சொந்தமான கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மாநகராட்சி குப்பை கிடங்கு சங்கரன்கோவில் சாலையில் உள்ள ராமையன்பட்டியில் சுமார் 150 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் 32.5ஏக்கர் நிலப்பரப்பில் ராமையன் பட்டியில் அமைந்துள்ள குப்பை கிடங்கில் மாநகரப் பகுதிகளில் சேகரிக்கும் தினசரி 110 க்கு டன்னுக்கு அதிகமான குப்பைகள் இங்கு கொட்டப்பட்டு வருகிறது . மாநகரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் நுண் உரக்கடங்குகள் இருந்தாலும் ராமையன்பட்டி குப்பை கிடங்கில் மலை போல் குப்பைகள் காட்சியளிக்கும்.

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதினால் குப்பை கிடங்குகள் தீப்பிடிப்பது வழக்கமான நிகழ்வாக உள்ளது இந்த நிலையில் இன்று மாலை ராமையன்பட்டி குப்பை கிடங்கில் தீப்பிடித்ததினால் சங்கரன்கோவில் நெல்லை சாலையில் ராமாயன்பட்டி பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

ராமையன்பட்டியை ஒட்டி உள்ள அரசு புது காலனி ,சிவாஜி நகர் பாலாஜி நகர், சத்திரம் புதுகுளம் ,சங்கு முத்தம்மாள்புரம் ,அன்னை வேளாங்கண்ணி நகர் ஆகிய குடியிருப்பு பகுதியில் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் புகை மூட்டத்துடன் சிரமப்பட்டு வருகின்றனர்.பேட்டை, பாளையங்கோட்டை, நாங்குநேரி மற்றும் சேரன் மகாதேவி தீயணைப்பு நிலைய ஊழியர்கள் தீயணைப்பு வாகனங்களில் தீயை அணைத்து வருகின்றனர்.

Updated On: 22 July 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க