/* */

தூத்துக்குடியில் டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள்விடுமுறை: கலெக்டர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு 04.04.2021 காலை 10.00 மணி முதல் 06.04.2021 தேர்தல் நாள் இரவு 12.00 மணி வரை மற்றும் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் நாளான 02.05.2021 அன்றும் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

தூத்துக்குடியில் டாஸ்மாக் கடைகளுக்கு   4 நாட்கள்விடுமுறை: கலெக்டர் தகவல்
X

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் 2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு 04.04.2021 காலை 10.00 மணி முதல் 06.04.2021 தேர்தல் நாள் இரவு 12.00 மணி வரை மற்றும் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் நாளான 02.05.2021 அன்றும் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடை / பார்) விதிகள் 2003 விதி 12 துணைவிதி (2)-ன் படி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் அனைத்து எப்.எல்.2, மற்றும் எப்.எல்.3 (எப்.எல்.6தவிர) உரிமதளங்களில் அமைந்துள்ள மதுக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியபட்டால் சம்மந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.

Updated On: 31 March 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  2. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  3. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  4. ஈரோடு
    பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்
  5. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  6. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி ஆசிரியையிடம் நகை பறித்த இருவர் கைது
  7. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  8. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  9. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  10. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!