/* */

தூத்துக்குடியில் ரேசன் அரிசி கடத்தல் 4 பேர் கைது-அரிசிமூட்டைகள் பறிமுதல்

தூத்துக்குடியில் ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 3500 கிலோ எடையுள்ள அரிசி மூடைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்

HIGHLIGHTS

தூத்துக்குடியில் ரேசன் அரிசி கடத்தல் 4 பேர் கைது-அரிசிமூட்டைகள் பறிமுதல்
X

தூத்துக்குடியில் ரேசன் அரிசி கடத்தல் 4 பேர் கைது

தூத்துக்குடி புதிய பேரூந்து நிலையம் அருகில் ரேசன் அரிசி கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 3500 கிலோ எடையுள்ள 70 மூட்டை ரேசன் அரிசி, ஒரு ஆம்னி வேன் மற்றும் டாட்டா சுமோ கார் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைகுட்பட்ட பகுதியல் ரேசன் அரிசி கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின்பேரில், டவுன் டிஎஸ்பி கணேஷ் மேற்பார்வையில், தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வேல்ராஜ் தலைமையில் முதல் நிலைக் காவலர்கள் பென்சிங், மாணிக்கராஜ், சாமுவேல், மகாலிங்கம், செந்தில், திருமணி மற்றும் முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தூத்துக்குடியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது புதிய பேரூந்து நிலையம் அருகில் உள்ள சாலையில் வேகமாக வந்த ஆம்னி வேன் மற்றும் டாட்டா சுமோவை மடக்கி அவர்கள் சோதனை செய்ததில், அந்த வாகனங்களிலிருந்த தூத்துக்குடி அண்ணாநகர் 9வது தெருவைச் சேர்ந்த செல்லையா மகன் சிவப்பிரகாஷ் (27), டூவிபுரத்தைச் சேர்ந்த பாலு மகன் அருண் குமார் (25), ராஜகோபால் நகரைச் சேர்ந்த கருப்பசாமி மகன் மணிகண்டன் (26) மற்றும் வி.எம்.எஸ். நகரைச் சேர்ந்த குமார் மகன் கார்த்திக் ஆகியோர் 50 கிலோ எடையுள்ள 70 மூட்டைகளில் 3 ½ டன் ரேசன் அரிசியை கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் மேற்படி 4 பேரையும் கைது செய்து விசாரணை செய்ததில் அவர்கள் தூத்துக்குடி அண்ணாநகரில் உள்ள ஜீவா மாவு மில் உரிமையாளர் ஆறுமுகச்சாமி என்பவரிடம் வேலை செய்து வருவதாகவும், அங்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர்.

பின்னர், தனிப்படை போலீசார் கைது செய்த 4 பேரையும், பறிமுதல் செய்த 70 மூடை அரிசி, கடத்து வதற்கு பயன்படுத்திய ஒரு ஆம்னி வேன் மற்றும் டாட்டா சுமோ கார் ஆகியவற்றையும் தூத்துக்குடி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கைக்காக ஒப்படைத்தனர்.

Updated On: 8 Jun 2021 3:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்